விழுப்புரம்: கோட்டக்குப்பம் பகுதியில் இன்ஸ்டாகிராமில், ஆபாச கமெண்ட் செய்ததால் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, 16 வயது சிறுவனை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இன்ஸ்டாகிராமில், ஆபாச கமெண்ட்
புதுச்சேரி மாநிலம் வாணரப்பேட்டை, பிரான்சுவா தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது 16 வயது மகன் இன்ஸ்டாகிராமில், 'ரீல்ஸ்' பதிவிடுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் அவர் பதிவிட்ட ரீல்ஸ் பதிவிற்கு, புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்த சிறுவன் ஆபாச கமெண்ட் செய்துள்ளார்.
இதனால், ஜெயராஜ் மகனுக்கும், அந்த சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி பூங்காவில் இருந்த ஜெயராஜ் மகனை, சின்னக் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ஜாக் சஞ்ஜெய், சரத், சுனில் ஆகிய மூன்று வாலிபர்கள் சேர்ந்து தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில், 16 வயது சிறுவன் உட்பட 4 பேர் மீது கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு
சமூக வலைதளங்களில் வெளிப்படும் கருத்துகள் பெரும்பாலும் நுணுக்கமான பிரச்னைகளை உருவாக்கக்கூடியவை என்பதால், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இதைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டிய அவசியம் உண்டு. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் எச்சரிக்கை தேவை
இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் சமூக வலைதளங்கள் அனைவர் வாழ்கையிலும் முக்கிய இடம் பெற்றுள்ளன. இவை தகவல் பகிர்வுக்கு உதவினாலும், தவறான முறையில் பயன்படுத்தப்படும்போது பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, ஆபாசக் கருத்துகள், அவதூறு, மிரட்டல் போன்ற நடவடிக்கைகள் சட்டத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் எதிரானவை.
இணையத்தில் தன்னியல்பாக கருத்துகள் பதிவுசெய்வதற்கான உரிமை இருந்தாலும், அதற்கு எல்லைகள் உண்டு. எதிர்ப்பவர் மனமுறிவு அடையக்கூடிய வகையில் கருத்து தெரிவிப்பது தவிர்க்க வேண்டியது. இது போன்ற செயல்கள் விரோதங்களை ஏற்படுத்தி, வன்முறைக்கும் வழிவகுக்கலாம்.
எனவே, சமூக வலைதளங்களில் எதையும் பகிரும் முன் அதன் தாக்கத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். பொறுப்புள்ள நெறிப்பாதையில் நடந்து கொள்ள வேண்டியது இன்றைய தேவை.
இன்ஸ்டாகிராம்
இன்ஸ்ட்டாகிராம் (Instagram ) தமிழில் படவரி அக்டோபர் 2010இல் வெளியான ஓர் இலவச, ஒளிப்படங்களை பகிர்ந்துகொள்ள உதவும் மென்பொருளாகும். மெட்டாவின் கீழ் இயங்கும் ஒரு சமூக ஊடகம். பயனர்கள் ஒளிப்படம் எடுக்கவும் எண்ணிம ஒளிவடிகட்டியை செயல்படுத்தவும் இன்ஸ்ட்டாகிராமின் வலைத்தளம் உட்பட பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிரவும் உதவுகிறது. நகர்பேசி ஒளிப்படக் கருவிகளில் வழக்கமாக இருக்கும் 4:3 உருவ விகிதம் போலன்றி இதில் சதுரமாக உள்ளது. இதனை வேறுபடுத்தும் சிறப்பியல்பாகும் .