விழுப்புரம்: முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனைவி மீது சந்தேகபட்டு கணவனே மனைவியை கழுத்தறுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகேயுள்ள ஈச்சங்குப்பத்தில் தம்பதிகளான சரத்குமார்,பரணி ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மனைவி மேல் சந்தேகப்பட்டு கணவன் சரக்குமார் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் இருவருக்கும் சண்டை ஏற்படவே காலையில் கணவன் சரத்குமார் பிளிச்சிங் பவுடர் சோப்பாயில் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட சரத்குமார் முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார்.


மனைவி பரணி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கணினி பதிவு செய்யும் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருவதால் பரணியிடம் பேச வேண்டுமென சரத்குமார் சிகிச்சை பெற்று வரும் 308 வார்டுக்கு வர வழைத்துள்ளார். அப்போது கணவன் மனைவி பேசிக்கொண்டிருக்கும் போதே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் பரணியை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சரத்குமாரை விக்கிரவாண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விக்கிரவாண்டி போலீசார் சரத்குமாரை கைது செய்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தில் இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற நிலையில் அரசு மருத்துவமனையில் கணவனே மனைவியை சந்தேகபட்டு கழுத்தறுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண