Crime: மிளகாய் பொடி தூவி பிரபல ரவுடி வெட்டி கொலை; விழுப்புரத்தில் பயங்கரம்

Villupuram crime news: விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.

Continues below advertisement

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் ரவுடியை மர்ம நபர்கள் தலையில் தடியால் அடித்தும் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

விழுப்புரம் பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்த ரவுடியான லட்சுமணன் என்பவர் மீது பல்வேறு கொலை, திருட்டு, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இந்நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் ஜானகிபுரம் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அங்காளம்மன் கோவில் அருகே லட்சுமணன் மீது மிளகாய் பொடியை தூவி உருட்டு கட்டையால் தாக்கி தலையில் கத்தியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து கொலை சம்பவம் குறித்து அப்பகுதியை சார்ந்தவர்கள் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரனையில் தனது நண்பர்களுடன் மது அருந்தும் போது பணம் கேட்டு சண்டையிட்டதாகவும் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் போலீசார் லட்சுமணனின் நண்பர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola