‘கள்ள உறவில்தான் இருப்பேன்..’ பேச்சை கேட்காத மனைவி.. அன்றிரவே கணவன் எடுத்த முடிவு

திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியை பலமுறை கண்டித்தும் கேட்காததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்தார்.

Continues below advertisement

விழுப்புரம்: திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியை பலமுறை கண்டித்தும் கேட்காததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வாய்க்கால் மேடு பகுதியில் மணிகண்டன் உமா தம்பதியினர் செங்கல் சூளையில் பணி செய்து வருகின்றனர். இவரது மனைவிக்கும் வேறொருவருக்கும் திருமண உறவை மீறிய தொடர்பு இருந்ததால் பலமுறை தனது மனைவியை மணிகண்டன் கண்டித்துள்ளார். ஆனால் கணவன் பேச்சை கேட்காமல் தொடர்ந்து மனைவி திருமணத்தை மீறிய உறவை கைவிடாமல் இருந்ததால் நேற்றைய தினம் கண்டித்துள்ளார்.

கணவன் பேச்சை கேட்காத மனைவி

அப்போது மனைவி, கணவன் பேச்சை கேட்காமல் திருமணத்தை மீறிய உறவில்தான் இருப்பேன் என தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கணவன் இரவு மது குடித்துவிட்டு வந்து நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் தலையில் ஓங்கி அம்மி கல்லை போட்டு கொலை செய்துள்ளார். உடனே கணவன் அங்கிருந்து புறப்பட்டு கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து கண்டமங்கலம் போலீசார் மணிகண்டனை கைது செய்து கொலை செய்யப்பட்டு கிடந்த உமாவின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். மனைவியை கணவனே அம்மி கல்லை போடு கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தை மீறிய உறவுக்கான காரணங்கள்:

பொதுவாக கூறப்படுவது போன்று உடல்ரீதியான தேவைகள் மட்டுமே திருமணத்தை மீறிய உறவுக்கு முக்கிய காரணமல்ல. இணையரின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காதது, அவருக்கான நேரத்தை ஒதுக்காதது, மனம் விட்டு பேசாதது, பிரச்சினைகளை உரிய நேரத்தில் பேசி தீர்க்காதது, அவரின் எதிர்பார்ப்புகளுக்கும், எதிர்காலத்திற்கும் முக்கியத்துவம் அளிக்காதது, தனிமையை உணரச் செய்வது, காயப்படுத்துவது போலவும், சிறுமைப்படுத்துவது போலவும் தொடர்ந்து பேசுவது, கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதது, வீட்டில் இருந்தாலும் செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கியிருப்பது போன்றவையும் முக்கிய காரணங்களாகும். மேலும் இணையரின் செயல்பாட்டில் எப்போதும் குறைகளை சொல்வது, இயலாமையை சுட்டிக் காட்டி பேசுவது, எந்த ஒரு விதத்திலும், சூழலிலும் பாதுகாப்பின்மையை உணரச் செய்வதும், திறமைகளை பாராட்டாததும், ஒரு குழந்தை பிறந்ததும் குடும்ப சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை உரிய முறையில் அணுகாததும் கூட முக்கிய காரணங்களாகும்.  இது போன்று தனக்கான நேரமும், முக்கியத்துவமும் கிடைக்காத வேலைகளில் தான், இல்லற வாழ்வில் இருப்பவர்கள் அதையும் மீறி சென்று வெளிநபர்களுடனான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். 

கணவன், மனைவி செய்ய வேண்டியவை என்ன?

ஓடி ஓடி உழைத்து பணம் சம்பாதித்து இணையரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதால் மட்டுமே இல்லற வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட்டு விடாது. இணையரின் எண்ணங்களுக்கான முக்கியத்துவமும், அவர்களுக்கான நேரமும் ஒதுக்குவதும் அவசியமாகும்.

  • வீட்டில் இருக்கும்போது செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கி இருக்காமல், இணையரிடம் மனம் விட்டு பேசுங்கள்.
  • மனஸ்தாபம் ஏற்பட்டால் அதனை வளர்ப்பதை விடுத்து உடனடியாக பேசி தீர்க்க பாருங்கள்
  • ஏதேனும் சண்டை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் அன்று இரவுக்குள்ளே அதற்கான சுமூகமான முடிவை எட்டி, மறுநாளை மகிழ்ச்சியானதாக தொடங்குங்கள்
  • இணையரின் சின்ன, சின்ன ஆசைகளுக்கு முக்கியத்தும் கொடுங்கள்
  • இணையரின் எதிர்காலம் மற்றும் பணி தொடர்பான முயற்சிகளுக்கு முடிந்தவரை பக்கபலமாக இருங்கள்
  • குறைகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவதை தவிர்த்து, அவர் தன்னை மெருகேற்றிக் கொள்ள உதவுங்கள்
  • இணையரின் திறமைகளை மனமகிழ்ந்து பாராட்டுங்கள்
  • ஆண்/பெண் பேதமின்றி அனைவருமே பாராட்டுக்கு ஏங்குபவர்கள் தான். எனவே யார் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் பாராட்டுவது உறவு வலுவடைய சாதகமாக அமையும்
  • இணையரின் எதிர்பார்ப்புகளை புரிந்து செயல்படுவதும் உறவுகளுக்கு நல்லது
  • பணம் இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்ற பொய்யான பிம்பத்தை நம்பாமல், குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்
  • எந்தவொரு சூழலிலும் உங்களின் இணையரை தனிமையை உணரச் செய்வது திருமண உறவிற்கு எந்தவகையிலும் நல்லதல்ல
  • ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது இணையரின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் கேட்பதும் நல்லது 
  • தன்னுடன் இருக்கும் நேரங்களில் இணையர் மிகவும் பாதுகாப்பாக உணர்வதை உறுதி செய்யுங்கள்
  • குழந்தை பிறப்பினால் பெண்ணின் உடலில் எற்படும் மாற்றங்களை புரிந்து கொண்டு, அவரை புரிந்து கணவர் நடந்துகொள்வதும் அவசியமாகும்

மொத்தத்தில் இணையருக்கான நேரத்தையும், உரிய முக்கியத்துத்தையும் கொடுத்துவிட்டாலே, திருமண வாழ்வில் ஏற்படும் பல முக்கிய இடர்பாடுகளை மிக எளிதாக கடந்து விடலாம் என்பதே உண்மையாகும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola