விழுப்புரம்: விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆறு சவரன் தாலியை ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவத்தில் பெண்ணின் தோல் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரத்தில் ஹெல்மெட் கொள்ளையன்
விழுப்புரம் அருகேயுள்ள பாப்பனப்பட்டு கிராமத்தை சார்ந்த வெங்கடேசன் மற்றும் புவனேஸ்வரி தம்பதியினர் பாபனப்பட்டிலிருந்து விழுப்புரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, அய்யங்கோவில்பட்டு மேம்பாலம் அருகே அவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணித்த புவனேஷ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆறு சவரன் தங்க தாலியை பறித்து சென்றுள்ளார்.
காவல்துறை விசாரணை
தங்க தாலியை பறித்தபோது நிலைதடுமாறி வெங்கடேசன் மற்றும் புவனேஷ்வரி தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்துள்ளனர். இதில் புவனேஸ்வரியின் இடது பக்க தோள்பட்டையில் எலும்பு முடிவு ஏற்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பியுள்ளார். தங்க தாலி வழிப்பறி குறித்து வெங்கடேசன் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். அய்யங்கோவில்பட்டு பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததை அறிந்து கொண்டு வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளயர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.