மேலும் அறிய
(Source: Poll of Polls)
மணப்பெண் சீராக கொண்டு வந்த நகை திருட்டு; தொடர் திருட்டு சம்பவத்தால் மக்கள் பீதி
விக்கிரவாண்டியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மணப்பெண் சீராக கொண்டு வந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை.

மணப்பபெண் சீராக கொண்டு வந்த 15 சவரன் தங்க நகைகள் திருட்டு
Source : ABP NADU
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மணப்பெண் சீராக கொண்டு வந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களை மர்ம் நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்த குமார் பூ பல்லாக்கு செய்யும் தொழில் செய்து வருகிறார். இரவு வீட்டை பூட்டிக்கொண்டு அருகே உள்ள ரெட்டிக்குப்பம் சாலையிலுள்ள மற்றொரு வீட்டில் குடும்பத்தோடு சென்று உறங்கியுள்ளனர். அதிகாலை மீண்டும் குமார் பாரதி நகரில் உள்ள வீட்டிற்கு சென்றபோது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த வீட்டில் பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகளையும் , மற்றும் வெள்ளிப் பொருள்களையும் கொள்ளையடித்து கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
கொள்ளை சம்பவம் குறித்து குமார் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து சம்பவ இடத்தில் தடயங்களை விசாரணை எடுத்தனர். பாரதி நகர் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் வீட்டில் யாருமில்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். கொள்ளை சம்லவம் நிகழ்ந்த வீட்டில் இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று சீராக கொண்டு வரப்பட்ட 15 சவரன் தங்க நகை கொள்ளயடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இதேபோல், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருமலை, 63; விவசாயி. இவர், கடந்த 23ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சென்னை திருவெற்றியூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றவர், நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோ இருந்த ஒரு சவரன் நகை, 400 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 22 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். குறிப்பாக விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சமபவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















