சமீபகாலமாக குடும்பங்களுக்குள் நடக்கும் குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது. வேலூரில் நேற்று இதேபோல ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது குடியாத்தம். இங்குள்ளது பிச்சனூர்பேட்டை. இந்த பகுதியில் வசித்து வருபவர். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்ட நிலையில், ஒரு பெண்ணுக்கு மட்டும் இன்னும் திருமணமாகவில்லை.


வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவி:


சமீபநாட்களாக ரேவதி அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிகளவு நேரம் செலவிட்டு வந்தார். வீடியோ காலிலும் அடிக்கடி பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்த சேகர் தனது மனைவி ரேவதியை கண்டித்துள்ளார். இதனால், கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.


இந்த நிலையில், நேற்று ரேவதி வீடியோ காலில் யாருடனோ பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு சேகர் வந்துள்ளார். தனது மனைவி மீண்டும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த சேகருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கணவன் – மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


அரிவாள்மனையால் வெட்டிய கணவன்:


வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் இருந்த அரிவாள் மனையால் ரேவதியின் வலது கையை சேகர் வெட்டியுள்ளார். இதில் ரேவதிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதால், ரத்தம் ஊற்றியுள்ளது. இதனால், ரேவதி வலியில் அலறி துடித்துள்ளார். ரேவதியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். வீடியோ காலில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் மனைவியை கணவன் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


மேலும் படிக்க: Spiderman Couple: தோழியுடன் ஸ்பைடர்மேன் உடையில் பைக்கில் அட்ராசிட்டி செய்த இளைஞர்! தட்டித்தூக்கிய போலீஸ்


மேலும் படிக்க: பள்ளியின் பூட்டை உடைத்து ரூ. 25,000 கொள்ளை - போலீஸ் தீவிர விசாரணை