வேலூர் மாநகர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் முன்னா வயது (37). இவர் நேதாஜி மார்கெட்டில் காய்கறி மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி. இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த போஸ்டர், பேனர் ஒட்டும் தொழில் செய்யும் மணிகண்டன் வயது (37) குடும்ப தகராறு காரணமாக அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு தனியாக வசித்து வருகிறார். முன்னாவும் மணிகண்டனும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில்,  இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு பெரியார் பூங்காவில் அமர்ந்து மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறியதால் மணிகண்டன் முன்னாவின் மனைவி மகேஷ்வரியை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இருவருக்கும் முன்விரோதமாக மாறியது.

  


 




 


அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து முன்னா அங்கிருந்து சென்று விட்டார். போதை தலைக்கேறிய நிலையில் ‌கோட்டை பெரியார் பூங்காவின் மரத்தடியில் மணிகண்டன் உறங்கிக்கொண்டிருந்ததார். அப்போது மீண்டும் அங்கு வந்த முன்னா தனது மனைவியை தவறாக பேசியதால் கடும் ஆத்திரத்தில் இருந்த அவர் அங்கிருந்த கருங்கல்லை எடுத்து மணிகண்டன் தலை மீது கல்லை போட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் அலறி துடித்தார். சம்ப இடத்தில் இருந்து முன்னா தப்பித்து ஓடிவிட்டார். மணிகண்டன் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியில் இருந்த பொது மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் முன்னாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


 




இந்நிலையில் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த முன்னாவை கைது செய்து விசாரணை நடத்தினர். முன்னாவை நீதிமன்ற காவலில் எடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் முன்னா மீது பிக்பாக்கெட், வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மனைவியை அவதூறாக பேசியதால் நண்பன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்பதற்கு உதாரணம் இந்த சம்பவம் ஆகும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண