வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி காவலளி மர்மநபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இக்பால் சாலையில் உள்ள தனியார் நர்ஸரி, பிரைமரி பள்ளியில் காவலாளியாக பணியாற்றும் முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த இஃர்பான். இந்த நிலையில் இன்று காலை மிதிவண்டியில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இஃர்பானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.
உடனடியாக தகவலறிந்து சென்ற வாணியம்பாடி நகர போலீசார் இஃர்பானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து வாணியம்பாடி துணை காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் இக்கொலைச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் தனியார் பள்ளியிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
காவலாளி இர்பான் மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்களை பிடிக்க வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. வாணியம்பாடியில் காலையிலேயே பள்ளி காவலாளியை கத்தியால் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.