திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் தாமஸ் என்கிற விஜஸ் வயது (23) இவர், சுரேன் வயது (19), சந்திப்பு அரவிந்த் மற்றும் அதே கிராமத்தைச் 12-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் சேர்ந்து நான்கு நபர்களும் அருகில் உள்ள கிராமத்திற்கு தெருகூத்து பார்க்க இரண்டு நாட்கள் முன்பு சென்றுள்ளனர்.
தெருக்கூத்து முடிந்த பிறகு வீட்டிற்கு இரண்டு சக்கர வாகனத்தில் நான்கு நபர்களும் திரும்பி கொண்டிருந்தனர்.அப்போது வாகன தனிக்கையில், ஈடுபட்டு இருந்த கீழ்க்கொடுங்காலூர் காவல்துறையினர் மூன்று நபர்களை மடக்கி பிடித்தனர்.அப்போது நான்கு நபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் காவல்துறையினர் மூன்று நபர்களையும் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் 4 நபர்கள் மீதும் திருட்டு வழக்கு பதிய காவல்துறையினர் முயற்சிப்பதாக கூறி 4 நபர்களின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 4 மாணவர்களின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், 4 நபர்களையும் விடுவிக்கக் கோரியும் காவல்துறையினரை கண்டித்தும் மாலை 6மணி அளவில் கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வந்தவாசி வட்டாட்சியர் முருகானந்தம் விரைந்து அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 4 வாலிபர்களின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் இந்த சாலை மறியலால் வந்தவாசி-மேல்மருவத்தூர் செல்லக்கூடிய சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முருகானந்தம் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது 4 நபர்களையும் இரவு நேரத்தில் சென்றதால் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்றுள்ளனர் விசாரணை முடிந்தவுடன் காவல்துறையினர் அனுப்பி விடுவார்கள் என்று இந்த கூட்டத்தில் 4மாணவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இது குறித்து ABPNADU குழுமத்தில் இருந்து தொலைபேசியின் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவுன்குமார் ரெட்டியிடம் பேசுகையில், கீழ்க்கொடுங்காலூர் காவல்துறையினர் அப்பகுதியில் இருந்து 4 நபர்களையும் சந்தேகத்தின் பேரில்தான் அழைத்து வரப்பட்டுள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றோம் என்றும், இந்த 4 நபர்களின் பெற்றோர்களிடம் உங்களுடைய பிள்ளைகள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று தவறான தகவல் சென்றுள்ளது.
இதனால்தான் பெற்றோர்கள் அந்த கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க தவறான தகவல் என்றும் அவர்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளதா என்று பார்த்து வருகிறேன் என்று தெரிவித்தார். மேலும் இரவு நேர தெருக்கூத்து ஆட்டம் முடிந்ததும் வீட்டிற்கு திரும்பிய நான்கு மாணவர்களை காவல்துறையினர் ஜெய்பீம் பட பாணியில் சந்தேகத்தின் பெயரில் விசாரணை என்று கூறி அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் மேல் ஆகியும் இன்றுவரை மாணவர்களை வீட்டிற்கு அனுப்பவில்லை மற்றும் அவர்கள் மீது பொய்யான திருட்டு வழக்கு போடப்பட்ட உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்