உத்திரபிரதேசம் மாநிலத்தில் 30 வயது இளம்பெண்ணை  சிறைப்பிடித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




திருமண ஆசைக்காட்டிய குற்றவாளி :


சத்திஸ்கர் மாநிலத்தில் 30 வயதுடைய பெண் ஒருவரை இம்ரான் என்னும் நபர் காதலித்து வந்துள்ளார். டெல்லியை சேர்ந்த அந்த நபர் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை காதலித்து வருவதாக கூறிய இம்ரான் , அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்த திருமணம் செய்துக்கொள்கிறேன் என உறுதியளித்திருக்கிறார். இதனால் அவருடன் சம்மதித்து சென்ற பெண்ணை , சிறைப்பிடித்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தன்னை அங்கிருந்து டெல்லிக்கு இம்ரான் அழைத்து சென்றதாகவும் , டெல்லியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்துவிட்டு , தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.




குற்றவாளிகள் கைது :


குற்றவாளிகள் அடைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து தப்பிய அந்த பெண் அங்கிருந்து சத்திஸ்கரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு உறவினர்களின் உதவியுடன் பஸ்தார் காவல் நிலையத்தில் இம்ரான் மற்றும் அவரது நண்பர்கள் குறித்து புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் காவல்துறை ஷாஜஹான்பூர் காவல்துறையைத் தொடர்பு கொண்டது, அதன் பிறகு உள்ளூர் காவல்துறையினருடன் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு குற்றவாளிகளை கைது செய்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.


 


செங்கல்பட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் :


 இதே போல செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க செவிலியல் பெண்ணை காதலித்து வந்த திருமணம் ஆன சரவணன் என்ற நபர் , நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரவணன் தனது நண்பர்களான  சஞ்சய், சூரிய பிரகாஷ் ஆகியோருடன் காரை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். செவிலியர் பெண்ணை பேருந்தில் பின்தொடர்ந்து சென்று காஞ்சிபுரத்தில், வலுக்கட்டயமாக பெண்ணை காரில் ஏற்றி உள்ளனர். இதனையடுத்து பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றி சரவணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதனை அடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, அப்பெண்ணை நள்ளிரவில் செங்கல்பட்டு ஆத்தூர் அருகே உள்ள முட்புதரில் தள்ளிவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்துறையினர் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


 


 


 


 


 










ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண