மனித மாமிசம் உண்பது தொடர்பான க்ரைம் சம்பவங்கள் வெளிநாட்டில் அவ்வபோது நடப்பது உண்டு. மன நோய் பாதிக்கப்பட்டு சைக்கோக்களாக மாறும் சிலர் அப்படியான கொடூர சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் இதாகோ மாகாணத்தில் லாரி ஒன்றில் தலைகீழாக தொங்கியவாறு முதியவர் ஒருவரின் சடலத்தை போலீசார் பார்த்துள்ளனர். அந்த சடலத்தின் பாகங்கள் சிலவற்றை காணவில்லை. சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் கைப்பற்றப்பட்ட உடல் டேவிட் என்ற முதியவர் என தெரியவந்தது. 


Crime On Children | 6 வயது சிறுமிக்கு பால்வினை நோய்.. தந்தையின் நெருங்கிய நண்பன் செய்த கொடூரம்..


இந்த கொலையை செய்தவர் யார் என நூல்பிடித்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையின் படி ஜேம்ஸ் டேவிட் என்ற நபர் வீட்டிலேயே மனித உடற்பாகங்களை வெட்டி உண்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் காவல்துறை அதிரடி சோதனை நடத்தினர். வீட்டுக்குள் நுழைந்த காவலர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஜேம்ஸ் வீட்டு மைக்ரோவேவ் ஓவன் ரத்தத்தால் நிறம் மாறி இருந்தது. வீட்டு கிச்சனின் கல்லீரல், நுரையீர பாங்கள், கண்ணாடி குவளைகளில் மனித ரத்தம் என வீடே ரத்தக்களறியாக காட்சி அளித்துள்ளது. இதனையடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார் ஜேம்ஸ். 


 



கைது செய்யப்பட்ட நபர்


இது குறித்து விசாரணையில் ஜேம்ஸ் சொன்ன காரணம் போலீசாரை அதிர வைத்தது. மனித பாகங்களை சாப்பிட்டால் தன்னுடைய மூளை அதீத சுறுசுறுப்பாக இருக்கும் என்றும் அதனால் முதியவரை கொண்டு மூளை உள்ளிட்ட பாகங்களை சாப்பிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஜேம்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜேம்ஸ் மனநலம் குறித்து மருத்துவ ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு நீதிமன்ற தண்டனை கிடைக்கும் என தெரிகிறது. மூளையின் சுறுசுறுப்புக்காக மனித மூளையை சாப்பிட்ட சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மாதிரியான வழக்குகள் நரமாமிசம் என்ற பிரிவின் கீழ் வரும். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண