புதுச்சேரியில் கோயில் கோபுரம் மீது வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டு பழைமை வாய்ந்த கலசம் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு கொசப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் இதன் நிர்வாகிகளில் ஒருவரான உதயா இவர் நேற்று காலை வழக்கம் போல் கோயில்க்கு சென்ற போது கோயிலின் கோபுரத்தின் மீது இருந்த கலசம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைத்தவர். இது தொடர்புக்  உருளையான்பேட்டைகாவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  கோயில் அமைந்திருக்கும் தெருவில் பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.


அதில் நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் மீன் ஏற்றிச்செல்லும் தட்டு வண்டியில் கோயில் உள்ள தெருவில் செல்வதும்  பின்னர் கோயில் கோபுர கலசத்தை தட்டுவண்டியில் திருடிக்கொண்டு அதே வீதி வழியாக வெளியேறுவதும் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து கலசத்தை திருடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் முதலியார்பேட்டை ஏழைமுத்து மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த  சரவணன் (எ) விக்னேஷ் (25) என்பவரும் 2). லெப்போர்த் வீதியை சேர்ந்த கார்த்திக் (24) ஆகிய இருவரை கைது செய்து அவர்கள் திருடிய கோயில் செம்பு கலசத்தையும் பறிமுதல் செய்யப்பட்டதுபோலீசார் விசாரணையில் அவர்கள் குடிப்பதற்கு பணம் இல்லாதால் திருடியதாக கூறியுள்ளனர்.  மேலும் இருவரையும் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர் படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.