மேற்கு திரிபுரா மாவட்டத்தில் ஓடும் காரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


நண்பனை நம்பிச் சென்ற பெண்:


மேற்கு திரிபுரா மாவட்டம் அமடாலி பைபாஸ் நெடுஞ்சாலையில் ஒரு இளம் வயது மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து, சாலையில் இருந்த அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு பரிசோதனை செய்ததில் அந்த பெண் சிலரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. 


பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, கல்லூரி முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, போகும் வழியில் கவுதம் ஷர்மா என்ற நபர் அந்த பெண்ணை (ஏற்கனவே அறிமுகமானவர்), தனது காரில் வருமாறு கூறியுள்ளார். இந்த பெண்ணும் தனக்கு தெரிந்தவர் என்ற காரணத்திற்கு காரில் ஏறி பயணித்துள்ளார். அந்த நேரத்தில் கவுதம் ஷர்மாவின் நண்பர்கள் 2 பேரும் காரில் இருந்துள்ளனர். 


பாலியல் வன்கொடுமை:


இதை பயன்படுத்தி கொண்ட அந்த 3 பேரும், அந்த பெண்ணிடம் முதலில் அத்துமீறியுள்ளனர், தொடர்ந்து, அந்த  பெண்ணை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அமடாலி பைபாஸ் நெடுஞ்சாலையில் தள்ளி விட்டு சென்றுள்ளனர். 


பின்னர் மருத்துவமனையில் அந்த பெண்ணை அனுமதிக்கப்பட்ட பின்னர், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் கவுதம் ஷர்மா (26) கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காரை ஓட்டிய சுதீப் சேத்ரி 31 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 


மூன்றாவது குற்றவாளியான மகேஷ் கலா பகுதியைச் சேர்ந்த பிரசென்ஜித் பால் (26) நேற்று கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டில் இருந்து 90 லட்சம் ரூபாயையும் போலீசார் மீட்டனர்.


3 பேர் கைது:


இதுகுறித்து மேற்கு திரிபுரா எஸ்பி கிரண் குமார் கூறுகையில், “ இந்த வழக்கு தொடர்பாக மூன்றாவது குற்றவாளியை நாங்கள் கைது செய்தோம். அவரது வீட்டில் இருந்து ஐபிஎல் பெட்டிங் மற்றும் பணமோசடி தொடர்பாக சில ஆவணங்கள் மற்றும் மடிக்கணினி மற்றும் ஏடிஎம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


அவர் மீது சூதாட்டச் சட்டத்தின் கீழும், பணமோசடி செய்ததற்காகவும் தனி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல்வன்கொடுமை வழக்கிலும் பிரசென்ஜித் பால் தொடர்பு இருப்பதை முதன்மை சாட்சியம் நிரூபிக்கிறது. தொடர்ந்து இதுகுறித்து விரிவாக விசாரித்து வருகிறோம்” என தெரிவித்தார்.


இதற்கிடையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, திரிபுராவில் மாணவிகள், பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் போராட்டம் நடத்தின.


நண்பர்:


முதற்கட்ட விசாரணையில் கவுதம் சர்மா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து மாதங்களாகத் தெரிந்தவர். அந்த பெண்ணை கல்லூரியில் பிக் அப் செய்த கவுதம், காலையில் இருந்து இரவு வரை திரிபுராவில் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளனர். பின்னர் நள்ளிரவில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது நண்பர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளி மைதானத்தில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரியவந்துள்ளது.