திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த உள்ள ஊசாம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் புதுராமன். இவருடைய மனைவி சுலோச்சனா. இவர்களுடைய ‌மகன் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றார்.சுலோச்சனாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து சுலோச்சனா கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு முதல் விதவை உதவித் தொகை பெற்று குடும்பம் நடத்தி வருகிறார். இதனிடையே சுலோச்சனா, கனகா, குப்பு ஆகிய மூன்று பெண்கள் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். அவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. மீண்டும் முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 நபர்களும் மனு கொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் புது மல்லவாடி வருவாய் ஆய்வாளரான ஷாயாஜி பேகத்தை விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


 




 


அப்போது வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம், மனு கொடுத்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது மீண்டும் உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் லஞ்சமாக தலா 15 ஆயிரம் தர வேண்டும் என  அவர்களிடம் கேட்டுள்ளார். அதன்படி 3 நபர்களும் முதற்கட்டமாக தலா 5 ஆயிரம் என 15 ஆயிரத்தை லஞ்சப் பணமாக கடந்த 15-ந்து நாட்களுக்கு முன்பு கொடுத்துள்ளனர். அதனை வாங்கிக்கொண்ட ஷாயாஜி பேகம் மீதமுள்ள பணத்தை நீங்கள் மூன்று நபர்களும் கொடுத்தால் தான் முதியோர் உதவித்தொகை வழங்க பரிந்துரைப்பேன் என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இவர்களிடம் லஞ்சம் கொடுக்க வசதி இல்லாததால், சுலோச்சனா திருவண்ணாமலை லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரியை அணுகியுள்ளார். அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.


 




 


பின்னர் லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரி ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புதுமல்லவாடி கிராமத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகத்திடம் அவரது அலுவலகத்தில் வைத்து கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை, லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகத்தினை கையும் களவுமாக பிடித்து கைது செய்து அங்கேயே வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது  ஷாயாஜி பேகத்தின் பையில் வைத்திருந்த 40 ஆயிரம் ரொக்கத்தையும் கைப்பற்றி இந்த பணம் நீங்கள் லஞ்சமாக பெற்ற பணமா என  லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண