திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாரந்தோறும் மக்கள் மனு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் வளாகத்தின் நுழைவு வாயிலில் விவசாயி ஒருவர் தங்களுடைய விவசாய  நிலத்தை மீட்டு தரக்கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி என இரண்டு நபர்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற நபர்கள் அளித்த மனுவில். திருவண்ணாமலை, மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா தானிப்பாடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் சேகர் ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 1996-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் அண்ணாமலை கவுண்டர் , அலமேலு என்பவரிடம் 1 ஏக்கர் 76 சென்ட் விலைநிலம் விலைக்கு வாங்கியுள்ளனர்.  ஆனால், இருசகோதர்களின் பூர்வீக சொத்து 50 சென்ட் இவர்களுக்கே முறைகேடாக அலமேலு விற்பனை செய்துள்ளார். படிப்பறிவு இல்லாத இவர்களை இவர்களின் இடங்களை முறைகேடாக விற்பனை செய்துள்ளனர். இதனை அறிந்த சகோதரர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். வாங்கிய விவசாய நிலத்திற்கு அளிக்க கூடிய UDR பட்டா 3103 விடுபட்டுள்ளது. 


 




 


அதனைத் தொடர்ந்து சகோதரர்களிடம் அளிக்கப்டட் UDR பட்டா நிலத்தை விற்பனை செய்த அலமேலு பெயரிலே பட்டா வழங்கப்பட்டுள்ளது. வழங்கிய பட்டா குறித்து ராஜேந்திரன் மற்றும் சேகர் ஆகிய இருவருக்கும் தெரியவில்லை. மேலும் இந்த விவசாய நிலத்தை (02.03.2022) அன்று அலமேலு பெயரில் இருந்த பட்டா அலமேலு மகள் காளியம்மாள் பெயரில் மாற்றப்பட்டுள்ளது. பட்டா மாற்றப்பட்ட தில்லு முல்லு ராஜேந்திரனுக்கும், சேகருக்கும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலமேலுவிடம் சென்று விவசாய நில விற்பனை மோசடி குறித்தும் எங்களுடைய இடத்தை தங்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்து விடு என்று கேட்டுள்ளனர். அதன் பிறகு அலமேலு பேரன் வேடியப்பன் மற்றும் சேகர் ஆகிய இருவரும் சேர்ந்து தானியம் பாடியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் அருணாச்சலம் மற்றும் சில நபர்களை வைத்து நிலத்தை பற்றி கேட்க கூடாது அப்படியும் மீறி நீங்கள் கேட்டால் அண்ணன், தம்பி உங்கள் இருவரையும் கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


 




 


இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் , வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தேன். ஆனால் அதிகாரிகள் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியும், எங்களுடைய விவசாய நிலத்தை மீட்டு தரக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மேலும் தீக்குளிக்க முயன்றவர்களை காவல்துறையினர் மீட்டு அவர்களின் மீது தண்ணீர் ஊற்றி பின்னர் விசாரனைக்காக காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.