திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கர்நாடகவை சேர்ந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையர்கள் அசாம் பகுதியை சேர்ந்த நபர்கள் எனவும் கூறப்படுகிறது


கடந்த 12ஆம் தேதி அதிகாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு ஏ டி எம் மையங்களில் 72 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை அடித்த விவகாரத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்கு சென்று ஆந்திரா வழியாக கோலார் கேஜிஎஃப் பகுதிக்கு தப்பிச்சென்ற கொள்ளையர்கள் காவல்துறையினர் வருவதை அறிந்து அவர்களுடைய தொலைபேசியை ஸ்வீட்ச் ஆப் செய்து விட்டு அங்கு இருந்து வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்றுள்ளதாகவும், இந்த கொள்ளையர்கள் அசாம் பகுதியை சேர்ந்த நபர்கள் எனவும் கூறப்படுகிறது. 


இது தொடர்பாக கேஜிஎப் பகுதியில் சிறப்பு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தங்க வைத்த கர்நாடக பகுதியை சேர்ந்த நபரை தற்பொழுது கைது செய்துள்ளதாகவும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம், கொள்ளையர்களை பிடிக்க போலீசார் நெருங்கி வருவது ஆறுதல் விஷயமாக இருக்கிறது.