திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 52 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் உட்பட  பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக புகார்கள் எழுந்தன. 

இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்காக திருட்டு நடைபெற்ற பகுதிகளில் பதிவான சிசிடிவி  காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

Continues below advertisement

இந்த நிலையில், நேற்று ஜின்னா ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம்  ராசு வீதி பகுதியைச் சேர்ந்த அப்துல் மகன் அக்பர் (52) என்பதும் இவர் தொடர்ந்து  இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அக்பரிடம் இருந்து ஆறு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், சிசிடிவி காட்சிகள் கிடைத்த போதும் சிறிய பையன் போல் இருந்ததால்  52 வயதான இவரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது எனவும் மேலும், தர்மபுரி மாவட்டத்தில் இவர் மீது சுமார் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் ‌போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்பரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.