வெட்டிய தம்பி ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் நடந்து சென்ற அண்ணன் - பதறி அடித்து ஓடிய மக்களால் பரபரப்பு
மது போதையில் வெட்டிய தம்பி ரத்தம் சொட்ட சொட்ட நின்ற அண்ணன்! ஆம்புலன்ஸும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நடந்தே சென்றதால் பரபரப்பு

மது போதையில் வெட்டிய தம்பி ரத்தம் சொட்ட சொட்ட நின்ற அண்ணன்! ஆம்புலன்ஸும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நடந்தே சென்றதால் பரபரப்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் அண்ணனை தம்பி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்தம் சொட்ட சொட்ட நின்ற அண்ணன் ஆம்புலன்ஸும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நடந்தே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கு குமார் மற்றும் எம்ஜி.குமார் என இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் தம்பியான எம்ஜி குமார் தனது மாமியார் வீட்டில் பெரியகரம் பகுதியில் தங்கி வசித்து வருகிறார். அப்போது அண்ணான குமார் தம்பியை பெங்களூர் வேலைக்கு அழைத்துச் செல்ல தம்பி வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது அண்ணனை பின்தொடர்ந்து வந்த தம்பி பாச்சல் கிராமம் அருகே திரும்பவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் தம்பி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணனின் கை மற்றும் இடுப்பில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதனால் ரத்தம் சொட்ட சொட்ட அண்ணன் அதே பகுதியில் கத்தி கதறிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் சட்டையை போட்டுக்கொண்டு அங்கிருந்து அண்ணன் நடந்தே சென்றார். சிறிது தொலைவு நடந்து சென்ற பொழுது ஆம்பூலனஸ் வருவதை அறிந்த குமார் அந்த ஆம்புலன்ஸில் ஏறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மது போதையில் அண்ணனை வெட்டிய தம்பியால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.























