திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தர பள்ளி ஊராட்சி போயர் வட்டம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் குணசேகரன் வயது (50) விவசாயி. இவருக்கு நேர் எதிரே இரண்டு வீடுகள் உள்ளன.

 

இந்த நிலையில் நேற்று இரவு ஒரு வீட்டில் குணசேகரன் குடும்பத்தினருடன்  தூங்கிக் கொண்டிருந்தார். அதை  அறிந்த மர்ம நபர் வீட்டின் தாழ்ப்பாலில் யாரும் வெளியே வராதது போல் துணி புடவையைக் கட்டி விட்டு மற்றொரு வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 15 ஆயிரம் பணம் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த எக்ஸெல் வண்டியை திருடி சென்றுள்ளனர். மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆதார் கார்டு மற்றும் பாஸ்புக் ஆகியவற்றை அங்கிருந்து தூக்கிச் சென்று 100 மீட்டர் தொலைவில் வீசி எறிந்தும் சென்றுள்ளனர்.

 

அதேபோல் அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மகன் சிவகுமார் வயது 40. இவருடைய வீட்டில் பீரோ உடைத்து 7 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் மகன் அழகிரி வயது 38 என்பவரின் வீட்டில் திருட  முற்படும் போது அழகிரி கத்தி கூச்சலிட்டதில் அங்கிருந்து மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு வீடுகளில் கொள்ளை மற்றும் ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.