திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சூதாட்டம் ஆடுவதில் ஏற்பட்ட மோதலில் ஒருவரை மது குடிக்க அழைத்து கழுத்தை அறுத்து கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த  துருஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சுரேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பலரும் அவ்வப்போது மது அருந்திவிட்டு சூதாட்டம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் சூதாட்டம் ஆடும் போதெல்லாம் சுரேஷ்  தான் ஜெயிப்பது  வழக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சூதாட்டம் ஆடும் போது, சுரேஷிடம் சிலர் வாக்குவாதத்தில், ஈடுப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி இரவு முழுவதும் சுரேஷ் சூதாட்டம் ஆடியதாக தெரிகிறது. இதில் அவரே வெற்றி பெற்ற நிலையில், இதனால், கடந்த 15 ஆம் தேதி, மாலை சுரேஷை சூதாட்டத்தில் ஈடுபடும் நண்பர்கள், துருஞ்சிகுப்பம், சுடுகாட்டின் அருகே  மது அருந்த வருமாறு, தொலைபேசி மூலம்  செய்து அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் துருஞ்சிகுப்பம் சுடுகாடு அருகில்  சென்றுள்ளார். 

Continues below advertisement

அப்போது அங்கே மது போதையில் இருந்த சிலர், சுரேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்,  பின்னர் வாக்குவாதம் முற்றியதில், சுரேஷை அவர்கள் தாக்கியுள்ளனர். இதனால், சுரேஷ் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், பின்தொடர்ந்து வந்த நபர்கள், அவரை வழிமறித்து, வெட்டு கத்தியால்  கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், அவ்வழியாக சென்ற பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சுரேஷை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக இதுகுறித்து, ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர்,  சடலமாக கிடந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சுரேஷின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியமளா தேவி, சம்பவம் இடத்தில் மோப்பநாய் சாரா உதவியுடன் நேரில் ஆய்வு மேற்க்கொண்ட நிலையில், இந்த சம்பவம்  குறித்து ஆலங்காயம் காவல்துறையினர்,  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காவல்துறையினர்  சுரேஷின் தொலைபேசியை கைப்பற்றி, அவர்  கடைசியாக பேசிய செல்போன் எண்ணை  கண்டறிந்த போது, அவர் அதே பகுதியை சேர்ந்த சரத் என்பவருடன் பேசியது தெரியவந்துள்ளது, உடனடியாக சரத்தை  பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், சூதாட்டத்தின் போது அதிகளவில் பணத்தை இழந்த நண்பர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் போது கைகலப்பாக மாறியதாகவும் அதனைத் தொடர்ந்து அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி, சுடுகாட்டிற்கு  வரவழைத்து மது அருந்திவிட்டு கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டனர்,

அதனை தொடர்ந்து  இந்த கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சரத் (வயது 24), தர்மதுரை (வயது 32), தென்பாண்டியன் (வயது 35), சுரேஷ் (வயது 39), ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். வாணியம்பாடி அருகே சீட்டு வைத்து சூதாட்டம்  விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டுக்கத்தியால்,  கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.