விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கொள்ளர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள் வயது 45. கூலித் தொழிலாளியான இவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக திண்டிவனம் நேரு வீதியில் உள்ள வங்கிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் பணம்  எடுக்க தெரியாத காரணத்தினால் அங்கு இருந்த வாலிபர் ஒருவரை பணம் எடுக்க சொல்லி உள்ளார். இந்த நிலையில் அந்த டிப் டாப் ஆசாமி அருள் வங்கியில் பணம் இல்லை என்று கூறி ஏடிஎம் கார்டை தந்துள்ளார். அருள் சிறிது நேரம் சென்றவுடன் அவருக்கு வங்கியில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து வங்கிக்கு சென்று விசாரித்ததில் அவர் வேறு ஒரு வங்கியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.


உடனடியாக அந்த ஏடிஎம் மையத்தை சோதனை செய்ததில் அந்த ஏடிஎம் கார்டு ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட டம்மி கார்டு என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் அருள் புகார் தெரிவித்தார் புகாரின் பெயரில் டிப்டாப் ஆசாமியை திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். திண்டிவனத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையில் கூலி தொழிலாளிடம் 30 ரூபாய் பணம் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து திண்டிவனம் பகுதியில் மோசடி சம்பவமும் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் மேலும் வங்கி நிர்வாகத்தின் மூலம் விழிப்புனர்வுஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.