தூத்துக்குடியை சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர், கோரம்பள்ளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்த போது, மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சுப்பிரமணியன் என்பவர், அந்த செவிலியரை ஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கையை எடுத்துக்கொண்டு தனது அறைக்கு வருமாறு கூறி அங்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 




இது குறித்து பாதிக்கப்பட்ட செவிலியர் புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்ததன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் முத்துவீரப்பன், டாக்டர் சுப்பிரமணியன் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்து  அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை அவருக்கு மருத்துவ பரிசோதனைக்கு போலிசார் அழைத்து சென்றனர். இந்த நிலையில் டாக்டர் சுப்பிரமணியன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியைதை தொடர்ந்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.




தொடர்ந்து அவரிடம் தூத்துக்குடி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிபதி ராஜ குமரேசன் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அவரை 18 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இது போன்று வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலியல் புகாரை தட்டிக்கேட்ட செவிலியரின் கணவர் உளிட்ட 5 பேர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனக்கு காதல் திருமண செய்தததாக தெரிவித்த அவர், கடந்த 10 தினங்களுக்கு முன் மருத்துவமனையில் வேலைக்கு செவிலியர்கள் தேவை என்று வந்த விளம்பரத்தை பார்த்து தான் வேலைக்கு சென்ற நிலையில், அந்த ஆஸ்பத்திரியின் நிறுவனர் மருத்துவர் சுப்பிரமணியன், ஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கையை எடுத்துக்கொண்டு தனது மாடிஅறைக்கு வருமாறு கூறினார். அதன் அடிப்படையில் சென்றபோது அவர் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால், தொடர்ந்து அழுதுகொண்டே வந்து சக செவிலியர்களிடம் தெரிவித்தபோது இதை யாரிடமும் கூறவேண்டாம் என்றனர்.



மீண்டும் மருத்துவர் மாடியில் இருந்து வந்து தன்னை தனியாக அழைத்து யாரிடமும் சொல்லாதே,ஏமோசனில் தான் அப்படி நடந்து கொண்டதாக கூறி தொடர்ந்து வேலைக்கு வா என்றார். நான் வீட்டிற்கு அழுதுகொண்டே வந்து நடந்த சம்பவத்தை எனது கணவரிடம் தெரிவித்தேன். தொடர்ந்து அவர் இதுகுறித்து தட்டிக்கேட்க தனது நண்பர்களுடன் மருத்துவமனைக்கு சென்றபோது அவரை ஏமாற்றி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று கணவர் உட்பட 5 பேரும் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் எந்த பெண்ணிற்கு நடைபெறக்கூடாது என்ற அடிப்படையில் தனக்கு நீதிகிடைக்க வேண்டும் என்ற அவர், தற்போது மருத்துவர் மீது சாதாரண வழக்கு பதிவு 354 (A1 IPC ) செய்யப்பட்டு உடல்நலம் சரியில்லை என மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றார்.