தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அனைத்து பொருட்களுமே தற்பொழுது விலை உயர்வு என்பது அதிகரித்து உள்ளது எனவே தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது கஞ்சா மஞ்சள் ஏலக்காய் பூச்சிக்கொல்லி மருந்து பீடி இலைகள் என அனைத்து தூத்துக்குடியில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு அவ்வப்போது கடத்தல் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனை தடுக்கும் வண்ணம் கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர், கியூ பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்த விதவிதமான கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் தூத்துக்குடி கடலோர காவல்படையினர் ஆழ்கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் வஜ்ரா மூலம் கடலோர காவல்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் இருந்து 40 கடல்மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த ஒரு படகை மடக்கி கடலோர காவல்படையினர் சோதனை செய்தனர். அந்த படகில் சாக்கு மூட்டைகளில் சுமார் 3½டன் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து படகில் இருந்த காட்வின், பிச்சையா, மில்டன், டார்ஜன், ரட்சகர், கிங் ஆகிய 6 பேரை மடக்கி பிடித்தனர். இதனை தொடர்ந்து படகு மற்றும் பீடி இலை மூட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பிடிபட்ட பீடி இலை, படகு மற்றும் 6 பேரையும் தூத்துக்குடிக்கு அழைத்து வந்து, சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 பேர் மீது நேற்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மாவட்ட காவல்துறை இந்த ஆண்டு இதுவரை 263 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர்உட்பட 263 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது