திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் சொந்த ஊரில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்திற்கு சென்ற காரை செங்கத்தைச் சேர்ந்த செல்வழகன் வயது (27) ஓட்டிச்சென்றார். காரில்  ராமச்சந்திரன் வயது (60) ,மனைவி சரஸ்வதி வயது (56),மகன் ராம்குமார் வயது (26) அமர்ந்து சென்றனர் .



வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காவல்துறையினர்  வாகனத்தை டிரைவர் பெரியசாமி வயது(47) ஓட்டிச்சென்றார். இதில் பெண் காவல்துறையினர் உள்பட 7 நபர்கள் பயணம் செய்தனர். காலை 8 மணியளவில் கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை ஏரிக்கோடி பகுதியில், கடலூர்-சித்தூர்  தேசிய நெடுஞ்சாலைகயில் உள்ள பள்ளத்தை வலப்புறமாக திருப்பி காவல்துறை வேன் கடந்த போது, எதிரில் வந்த கார் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ,காரை  இழுத்துச் சென்று, சாலை ஓரம் உள்ள வினாயகர் கோயில் அருகே விட்டது. காவல்துறையினர் வேன் பின்னர்  கவிழ்ந்தது. 


 




 


பீடி கம்பேனி நடத்திய கே.சி.வீரமணி பில்லினியர் ஆனது எப்படி..? KC Veeramani History | ADMK | DVAC Raid



சத்தம் கேட்டு  அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அலரி அடித்துக்கொண்டு ஓடிவந்து பார்த்தனர் காவல்துறை வேன் கவிழ்ந்துள்ளதைக் கண்டும் பிறகு அங்கு இருந்த பொது மக்கள் ,ஏணி மூலம் காவல்துறை வேனில் இருந்தவர்களை வெளியே உயிருடன் மீட்டனர். டிரைவர் உள்ளிட்ட 8 நபர்களையும் 108 ஆம்புலன்ஸ்  மூலம், அனுப்பி வைத்தனர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்றனர். 



கார் மோதியதில் காரில் பயணித்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி  பலியானார் . ராமச்சந்திரனை பலத்த காயங்களுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்டார். முன் சீட்டில் அமர்ந்திருந்த ராம்குமாரை கடப்பாறை விட்டு நீக்கி,காலில் காயத்துடன் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  108 மூலம் அனுப்பி வைக்கப்பட்டார் .டிரைவர் செல்வழகன் முகத்தில் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். 





தகவல் அறிந்து வந்த ஏடிஎஸ்பி அசோக்குமார், ஆரணி பயிற்சி டிஎஸ்பி ரூபன்குமார்,நில அபகரிப்பு டிஎஸ்பி பாலகிருஷ்ணன், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர்(பொ) கோகுல்ராஜ்,சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார்,வருவாய் ஆய் வாளர் கணபதி,விஏஓ ரமேஷ்குமார்  மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொக்லைன் மூலம் கார், போலீஸ் வேனை மீட்டனர். சாலைக்கு வெளியே சம்பவம் நடந்ததால் ,போக்குவரத்துக்கு பாதிப்பில்லை.


‛பள்ளிக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது’ -தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் எச்சரிக்கை!