திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரைவு தரிசன கட்டண மோசடி தொடர்பான விவகாரத்தில் முன்ஜாமின் கோரிய வழக்கு. மாவட்ட குற்றபிரிவு விசாரணை அதிகாரி, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
 
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கந்தசஷ்டி மட்டுமல்லாமல் திருச்செந்தூர் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கட்டண தரிசனம் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் என பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள். இதில் 25 லட்ச ரூபாய் முறையீடு செய்ததாக கோயில் நிர்வாகம் தரப்பில் மூன்று பேரும் இது புகார் கொடுக்கப்பட்டது.
 
போலி டிக்கெட்  தொடர்பான ஆவணங்களை
 
இந்த நிலையில், கோயில் பணியாளர்கள் பாலமுருகன், உச்சிமாகாளி  உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரி உயர்  நீதிமன்றம்  அமர்வில்  மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தது. கோவில் தரப்பு  வழக்கறிஞர், இது ஒரு விசித்திரமான வழக்கு. ஒரு பக்தர் 100 ரூபாய் தரிசன டிக்கெட் எடுக்கும் போது, கணினியில் ஒரு டிக்கெட் உருவாகும் அதே போன்று போலி டிக்கெட் உருவாகும். அந்த  டிக்கெட்டை புதிதாக வரும் நபர்களிடம் விற்பனை செய்து முறைகேடு செய்துள்ளனர். இது போலி டிக்கெட்  தொடர்பான ஆவணங்களை, மாவட்ட குற்றப்பிரிவு விசாரணை அதிகாரியிடம் கொடுத்துள்ளோம், விசாரணை நடைபெற்று வருகிறது, என கூறினார்.
 
அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
 
போலி டிக்கெட் விற்பனை செய்த பணத்தை  பணியாளர்கள் எவ்வாறு எடுத்துச் சென்றார்கள் சோதனை செய்யக்கூடிய முறை இல்லையா என நீதிபதி கேட்டார். அப்போது அரசு தரப் பில்...," இவர்கள் பணத்தை எடுத்துச் செல்லும் ரெண்டு சம்பவங்கள் மட்டும் சிசிடிவி யில் பதிவாகியுள்ளது. கோயிலில் திருட்டுத்தனம் செய்வதற்கு எப்படித்தான் இவர்களுக்கு மனது வந்ததோஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது மனுதாரர்கள் தரப் பில், இதுபோன்று கட்டண டிக்கெட் விற்கும் மூன்று மையங்கள் உள்ளது .எங்களை மட்டுமே குற்றம் சொல்கின்றனர். காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என என்ன கூறினர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல் துறையில்  விசாரணைக்கு அழைத்தால்,  மூன்று பேரும் ஒத்துழைக்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை மூன்று பேரையும் கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டு. இந்த வழக்கின் மாவட்ட குற்றபிரிவு  விசாரணை அதிகாரி, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.