திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சத்திய விஜய நகரம் என்கின்ற எஸ்.வி.நகரம் கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளி குணசேகரன் வயது (70 ) இவருக்கு காந்தம்மாள் என்ற மனைவியும்  இவன்களுக்கு சிவா தேவக்குமார் என்ற 2மகன்களும் வனிதா என்ற மகளும் உள்ளனர்.


 இதில் மனைவி காந்தம்மாள் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் மகள் வனிதா திருமணமாகி பெங்களுரில் வசித்து வருகின்றார்.மேலும் சிவா என்ற மகன் திருமணம் ஆகி அவருடைய மனைவி சிலநாட்கள் வாழ்ந்து வந்துள்ளனர் அப்போது அவர் அடிக்கடி மது அருந்தி விட்டு தகராறு செய்வராம். அதனால் சிவாவின் மனைவி விட்டு சென்றுள்ளார்  எனக்கூறப்படுகிறது. மனைவியை பிரிந்து தற்போது தந்தை குணசேகரனுடன் வாழ்ந்து வருகின்றார்.


 




 


 மற்றொரு மகன் தேவக்குமார் காதல் திருமணம் செய்து கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் கிராமத்தில் அவருடைய மனைவியுடன் வசித்து வருகின்றார். இதனால் எஸ்.வி.நகரம் கிராமத்தில் முதியவர் குணசேரகன் தனியாக வசித்து வருகின்றார். பின்னர் அங்குள்ள பகுதியில் போண்டா கடை வைத்து பிழைப்பை நடத்தி வருகிறார் 


மேலும் முதியவர் குணசேகரனின் இளைய மகன் தேவக்குமார் வேலைக்கு சரியாக செல்லாமல் தினமும் மதுகுடிக்கும்  பழக்கம் உடையவர் இதனால் அடிக்கடி மது குடிப்பதற்கு தன்னுடைய தந்தையிடம் சண்டையிட்டு அடித்து துன்புறுத்தி பணத்தை பிடிங்கி சென்று மது குடிப்பது வழக்கமாக கொண்டுள்ளார்.இந்நிலையில்  தன்னுடைய தந்தை குணசேகரனிடம் இளையமகன் தேவக்குமார் குடிபோதையில் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். 


 




 


தந்தை குணசேகரன் கொடுத்த பணம் போதிவில்லை என்று கூறி அதிகளவில் பணம் பெற வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.முதியவர் குணசேகரன் பணம் தர மறுத்த காரணத்தினால் ஆத்திரமடைந்த தேவக்குமார் அருகில் இருந்த கட்டையால் தன்னுடைய தந்தையை தாக்கியுள்ளார். 


இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவடத்திலேயே பலியானார். இதனை கண்ட மகன் தப்பியோடிவிட்டார். மேலும் தகவலறிந்த வந்த ஆரணி கிராமிய காவல்துறையினர் சம்பவடத்திற்கு விரைந்து வந்து முதியவர் குணசேகரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


 



 


பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின் படி ஆரணி அருகே உள்ள மாமண்டூர் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறி தப்ப முயன்ற தேவக்குமாரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். 


ஆரணி அருகே மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை அடித்து கொன்ற மகனை 1மணி நேரத்தில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கொலையாளியை கைது செய்த சம்பவத்திற்கு பொதுமக்கள் போலீசாரை பாராட்டுகின்றனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X