சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் வீரலட்சுமி.  தமிழர் முன்னேற்றப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவருக்கு. மர்ம நபர்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக  ஆபாச வீடியோக்கள் அனுப்புவது, வீடியோ காலில் நிர்வாணமாக பேசுவது என, பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக கூறப்படுகிறது.


இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.அதனால், சில தினங்களுக்கு முன் வீரலட்சுமி அரிவாளுடன், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருபவர்களின் பெயரை சொல்லி மர்ம உறுப்பை அறுத்து விடுகிறேன். அப்போதாவது நடவடிக்கை எடுப்பீர்களா என, கேள்வி எழுப்பி, வீடியோ வெளியிட்டார்.



இதனையடுத்து  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த வீரலட்சுமி , நேற்று முன் தினம் மீண்டும் ஒரு புகார் மனுவை அளித்தார். அப்போது பேசிய அவர், ‛ சட்டசபை தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட மார்ச் 21 இல் வேட்பு மனு தாக்கல் செய்தேன். பின் செந்தமிழினி வீரலட்சுமி என்ற என் பேஸ்புக்' பக்கத்தில், 'மெசஞ்சர்' வாயிலாக, 40க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை அனுப்பினர். அதுபற்றி, ஜூன், 18ல், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். ஜூலை, 15ல், முனி என்பவரின் 'பேஸ்புக்' பக்கத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் படத்துடன், வீடியோ கால் அழைப்பு வந்தது. அதை ஏற்காமல் பல முறை தவிர்த்தேன். மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்ததால், 'டார்ச்சர்' தாங்க முடியாமல், அழைப்பை ஏற்றேன். எதிர்முனையில் பேசியவர், நிர்வாண நிலையில் இருந்தார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளானேன். மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.



மேலும் நேர்மையான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து விட்டேன். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்களது ஆணுறுப்பை அறுத்து விடுவேன் எனத் தெரிவித்து இருந்தார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.பின், வீரலட்சுமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அரிவாளுடன் வீடியோ வெளியிட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''அரிவாளை காட்டியது சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிபாடு தான் அது. நேர்மையான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து விட்டேன். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்களது ஆணுறுப்பை அறுத்து விடுவேன் எனத் தெரிவித்து இருந்தார். 


இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி(38), என்பவரை சங்கர் நகர் போலீசார் கேரளா சென்று கைது செய்தனர். கேரள மாநிலத்தில் மலப்புரத்தில் டிரில்லிங் மெஷின் ஆபரேட்டர் ஆக பணிபுரிந்து வரும் ஆரோக்கியசாமியை கைது செய்து நேற்று நள்ளிரவு சென்னை அழைத்து வந்தனர். விசாரணையில் , முகநூலில் வீரலட்சுமியின் வாட்ஸ்அப் எண் கிடைத்ததாகவும், பெண் என்பதால் , எண்ணிற்கு ஆபாசமாக வீடியோக்களை அனுப்பி பார்த்தேன், அதனைத் தொடர்ந்து அவர் என்னிடம் உன் மீது வழக்கு பதிய போவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக எனக்கு வாட்ஸாப்பில் தகவல் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து நான் வாட்ஸ்அப் பயன்படுத்துவது நிறுத்திவிட்டு, என்னுடைய மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட்டேன். இந்நிலையில் மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்த பொழுது மாட்டிக் கொண்டதாக, வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ஆரோக்கியசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் இன்று காலை அடைத்தனர்.