தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்து வம்பளந்தான் பகுதியை சேர்ந்தவர் மருதபாண்டியன்.  இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில்  நேற்று அவர் தனது காரில் தென்காசிக்கு பகுதிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்து வீட்டு காம்பவுண்ட்க்குள் காரையை நிறுத்திவிட்டு காரிலிருந்து சாவியை எடுக்காமல் வீட்டுக்குள் சென்றுள்ளார். இந்த நிலையில் அப்பகுதி வழியாக குடிபோதையில் வந்த  நபர் ஒருவர் வீட்டின் காம்பவுண்டுக்குள் சென்று உள்ளார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்படிருந்த காரில் சாவி இருப்பதை கண்ட அவர் காரை அங்கிருந்து திருடி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்து வெளியே வந்த மருதபாண்டியன் வீட்டின் முன் நிறுத்தி வைத்த காரை காணாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இது குறித்து செங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகாரும் அளித்துள்ளார். அதனடையில் வழக்குப்பதிவு செய்த செங்கோட்டை காவல்துறையினர் கார் காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வந்துள்ளனர். 


காவல்துறையின் விசாரணையில் ஷேக் முகமது என்பவர் குடிபோதையில் வீட்டின் காம்பவுண்டுக்குள் நுழைந்து காரை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. மேலும் ஷேக் முகமது திருடிய காரை எடுத்துக்கொண்டு செங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகில் குடிப்பழக்கத்தின் போது நண்பர்களான கணேசன் மற்றும் கிட்டாமணி என்பவர்களையும் காரில் அழைத்துக் கொண்டு தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியில் சுற்றியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து திருட்டு காரில் ஊரை சுற்றிக் கொண்டிருந்த மூவரையும் கையும் களவுமாக கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிப்போதையில் திருடிய காரில் குடிப்பழக்கத்தின் போது நண்பர்களான இருவரை அழைத்துக்கொண்டு பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்த  நிலையில் அவர்கள் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.