மாணவன் தமிழ்செல்வனின் உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமை பிணவறையில் இருந்து மாணவனின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் இறப்பு
மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் 7ம் தேதி திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவனின் மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டது.
 
பிணவறையில் இருந்து மாணவனின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
 
இந்நிலையில் மாணவன் தமிழ்செல்வனின் உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமை பிணவறையில் இருந்து மாணவனின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
மாணவரின் உடலை பெற்றுக் கொண்டாலும் அமைதியான முறையில் அவர் இறப்பிற்கான நீதி போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளனர். தமிழ்செல்வனின் உடல் அவரது குடும்பத்தினர்களுடன் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு அவரது உடலை இறுதி அஞ்சலி செய்வதற்காக  உறவினர்கள் எடுத்து சென்றனர்.