சென்னை : பெரும்பாக்கத்தில் கணவரை உயிருடன் புதைத்த பெண்.. மோட்சத்துக்கு உதவியதாக பகீர்
தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும், வீட்டின் தோட்டத்தில் தன்னை புதைத்துவிட நாகராஜ் லட்சுமியிடம் சத்தியம் வாங்கியதாகவும் தெரிகிறது.
சென்னை மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரின் மனைவி லட்சுமி. நாகராஜ் வீட்டின் கொல்லைப்புறத்தில் கோயில் கட்டி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறியவர்.இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சில நாள்களுக்கு முன் நாகராஜுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அப்போது வீட்டில் மனைவி லட்சுமி மட்டுமே இருந்திருக்கிறார் . கணவரின் நெஞ்சுவலியை கண்டு அதிர்ச்சியும், பரபரப்பும் அடைந்த லட்சுமி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்ததாக போலீஸாரிடம் கூறியுள்ளார்
அப்போது தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும், வீட்டின் தோட்டத்தில் தன்னை புதைத்துவிட நாகராஜ் லட்சுமியிடம் சத்தியம் வாங்கியதாகவும் தெரிகிறது. சத்தியத்தை மீற முடியாத லட்சுமி, கணவர் விருப்பப்படி தோட்டத்தில் உள்ள குழியில் புதைத்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வெளியூருக்குச் சென்ற மகள் தமிழரசி, வீடு திரும்பினார்.
அப்போது அவர், அப்பா எங்கு என்று அம்மா லட்சுமியிடம் திரும்பத்திரும்ப வலியுறுத்திக் கேட்டபோது நாகராஜை குழி தோண்டி புதைத்த தகவலை லட்சுமி, மகளிடம் சொல்லியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சியில் கைதான சக்திவேல்: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழரசி, உடனடியாக பெரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தபோது நாகராஜ் புதைக்கப்பட்டது உறுதியானது.இதையடுத்து வருவாய் துறையினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். சோழிங்கநல்லுர் தாசில்தார் மேற்பார்வையில் நாகராஜின் உடலானது தோண்டியெடுக்கப்பட்டது.
உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக நாகராஜ் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து லட்சுமியிடம் விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: இந்தி மொழியை ஏன் கற்க கூடாது? - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
Karthigai Deepam 2021: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா - கோயிலில் பரணி தீபம் ஏற்றம்
Agricultural law withdrawn : வேளாண் சட்டங்கள் வாபஸ்.. வரவேற்ற தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்.!
தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி!