மரகத நாணயம், கலகலப்பு2, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகர் நிக்கி கல்ராணி. இவர் அண்மையில் தனது வீட்டில் இருந்து 1.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதாக புகார் தெரிவித்திருந்தார். மேலும் தன்னிடம் வேலை பார்த்த 19 வயதுப் பணியாள்தான் இந்த திருட்டில் ஈடுபட்டதாக அவர் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது பொருட்களை திருடிய கல்ராணி வீட்டுப் பணியாள் விருத்தாசலத்தில் தனது வீட்டில் அருகே பிடிபட்டார். போலீசார் சோதனை நடத்தியதில் திருடிய நபரிடமிருந்து . நாய் முடியை ட்ரிம் செய்யும் கருவி,சில துணிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப் பட்டுள்ளன.
கல்ராணி தற்போது விர்ருனு, இடியட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.