மேலும் அறிய

சந்தேகத்தால் கொடூரம்! மனைவியைக் கொலை செய்துவிட்டு சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன் கைது!

விழுப்புரம் அருகே மனைவி மீது ஏற்பட்ட கடுமையான சந்தேகத்தால், அவரது தலையிலேயே மின்மோட்டாரைப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்த கணவன்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மனைவி மீது ஏற்பட்ட கடுமையான சந்தேகத்தால், அவரது தலையிலேயே மின்மோட்டாரைப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்த கணவனைத் திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொலை செய்த பின், சடலத்தின் அருகிலேயே கணவன் அமர்ந்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த தம்பதி

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரும், சிவரஞ்சனி என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தொடக்கத்தில் இவர்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்ற நிலையில், நாளடைவில் சரவணனுக்குத் தனது மனைவி சிவரஞ்சனியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அடிக்கடி வெடித்த குடும்பத் சண்டை

மனைவி மீது ஏற்பட்ட இந்த சந்தேகத்தின் காரணமாக, கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இவர்களைச் சமாதானப்படுத்த முயன்றும், சரவணனின் சந்தேகப் புத்தி மாறவில்லை எனத் தெரிகிறது.

மின்மோட்டாரால் தாக்கி கொடூரக் கொலை

இந்நிலையில், வழக்கம்போல இன்றும் தம்பதியினருக்கு இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சரவணன், வீட்டில் இருந்த கனமான மின்மோட்டாரை (Water Motor) எடுத்து, எதிர்பாராத விதமாக சிவரஞ்சனியின் தலையில் ஓங்கிப் போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி, பலத்த காயமடைந்த சிவரஞ்சனி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசாருக்குக் கணவனே கொடுத்த தகவல்

ஆத்திரம் தணிந்த பின், தான் செய்த செயலை உணர்ந்த சரவணன், தப்பியோட முயலாமல் தானே திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளார். "என் மனைவியை நானே கொலை செய்துவிட்டேன்" என்று அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்:

தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார், உடனடியாகப் பேரங்கியூர் கிராமத்தில் உள்ள சரவணனின் வீட்டிற்கு விரைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த மனைவி சிவரஞ்சனியின் அருகே, எவ்வித சலனமும் இன்றி அமர்ந்திருந்த சரவணனைப் போலீசார் கையும் களவுமாகக் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணை

இதனைத் தொடர்ந்து, சிவரஞ்சனியின் உடலை மீட்ட காவல் துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருவெண்ணெய்நல்லூர் போலீசார், கொலையின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலித்துத் திருமணம் செய்து கொண்ட மனைவியையே, சந்தேகத்தால் கணவன் மின்மோட்டாரைப் போட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!
விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!
15 வயதில் காதல் திருமணம் !! கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்
15 வயதில் காதல் திருமணம் !! கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
​60 பைக்குகள்... 2 லாரிகள்... வேலூர் வரை நீளும் நெட்வொர்க்! ஸ்ரீபெரும்புதூரில் சிக்கிய கொள்ளை கும்பல்!
​60 பைக்குகள்.. 2 லாரிகள்... வேலூர் வரை நீளும் நெட்வொர்க்! ஸ்ரீபெரும்புதூரில் சிக்கிய கும்பல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Tasmac Revenue : டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Online Deed Registration : இனி பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! அசத்தலான திட்டம்-ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? இதோ வழிமுறை
இனி பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! அசத்தலான திட்டம்-ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? இதோ வழிமுறை
Minister Nirmal Kumar : திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசிய தவெக அமைச்சர்..! வைரலாகும் நிர்மல் குமாரின் பழைய வீடியோ
திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசிய தவெக அமைச்சர்..! வைரலாகும் நிர்மல் குமாரின் பழைய வீடியோ
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Embed widget