அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவர் தனது மருமகளுக்கு வலுக்கட்டாயமாக ஆசிட் ஊட்டிக் கொன்றதாக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட கோபால்ஜன் பீபி, ரதாபரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பைரப்நகரில் வசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.


போலீசார் விசாரணை


சுமனாவின் மாமா ஜலீல் அலி புகார் அளித்ததை அடுத்து, ஜூலை 12ஆம் தேதி 21 வயதான சுமனா பேகத்தின் உடலை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரதாபரி காவல் நிலையத்தின் பொறுப்பாளர் உத்தம் அதிகாரி என்பவர் கூறுகையில், “புகாரின் அடிப்படையில் ஜூலை 12ஆம் தேதி விசாரணையைத் தொடங்கி, இறந்த பெண்ணின் மாமியாரைக் கைது செய்தோம். அவரது கணவர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மீது புகார்கள் உள்ளன, ஆனால் அவர்கள் கொலையில் ஈடுபட்டார்களா என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம். விசாரணை முடிந்தால்தான் முழு தகவல்கள் வெளிவரும்." என்று கூறியுள்ளார். 



பெண் குழந்தை பிறந்ததால் கொலை


அலி தனது புகாரில், சுமனா பீபியின் கணவர் ஷகில் அகமது (27) மற்றும் அவரது மாமியார் கோபால்ஜன் ஆகியோர் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததால் வலுக்கட்டாயமாக ஆசிட்டை குடிக்க வைத்துள்ளனர் என்று கூறி உள்ளார். இதனை செய்ய வேறு சில குடும்ப உறுப்பினர்களும் அவர்களுக்கு உதவினார்கள் என்றும் புகாரில் கூறி உள்ளார். 


தொடர்புடைய செய்திகள்: Highcourt On Thaali : "தாலியை கழட்டி வீசியது, கணவனுக்கு இழைத்த மோசமான கொடுமை” : கருத்து சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்


புகார்


"அவர்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என விரும்பி உள்ளனர். ஆனால் சுமனாவுக்கு சமீபத்திய பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சுமனாவை சித்ரவதை செய்ய ஆரம்பித்துள்ளனர் குடும்பத்தினர். அதன் தொடர்ச்சியாக ஒரு நாள் சோற்றில் ஆசிட் கலந்து வலுக்கட்டாயமாக ஊட்டிவிட்டு உள்ளனர். அதனை உண்ட சுமனா ரத்த வாந்தி எடுத்து இறந்துவிட்டார்” என்று ஜலீல் அலி தனது புகாரில் எழுதி உள்ளார்.



வழக்குப்பதிவு


எஃப்ஐஆர் அடிப்படையில், ரதாபரி போலீசார் கோபால்ஜன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 மற்றும் 34 இன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, ஜூலை 12 ஆம் தேதி சுமனா இரத்த வாந்தி எடுக்கத் தொடங்கியபோது, ​​​​அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரீம்கஞ்ச் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.