மேலும் அறிய
சிவகங்கை லாக்கப் மரணம்; அஜித் உடலின் உடற்கூராய்வு முடிவடைந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு !
பிணவறையில் அஜித்தின் உடலை பார்த்து மாஜிஸ்திரேட் விசாரணை - நீதி விசாரணை நடத்த கோரி மாஜிஸ்திரேட்டிடம் அஜித் குடும்பத்தினர் மனு.

அஜித் உடல் ஒப்படைப்பு
Source : whats app
அஜித்குமாரின் வாயில் மிளகாய்பொடியை கொட்டி சித்ரவதை செய்து, தண்ணீர் கொடுங்கள் என கெஞ்சிக்கேட்டும் தொடர்ந்து தாக்கியதாக அதிர்ச்சி தகவல்.
மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில், விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் அஜித்தின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்தநிலையில் சிவகங்கை மாவட்ட மாஜிஸ்திரேட் வேங்கடபிரசாத், இளைஞர் அஜித்தின் உடலை பார்த்து காயங்கள் குறித்து பார்வையிட்டார். பின்னர் அஜித்தின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து அஜித்குமாரின் தாயார், சகோதரர் மற்றும் குடும்பத்தினர் நேரில் சென்று பிணவறையில் அஜித்குமாரின் உடலை பார்வையிட்ட பின்னர், உடற்கூராய்வுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
உடற்கூராய்வு நடைபெற்றது
பின்னர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வீடியோ பதிவுசெய்யப்பட்டு, நடைமுறைளின்படி உடற்கூராய்வு நடைபெற்றது. அப்போது ”காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் அஜித் உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி இது போல சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” - என அஜித் குடும்பத்தினர் சார்பில் மாஜிஸ்திரேட்டிடம் மனு வழங்கினர்.
த.வெ.க.,வினர் மரியாதை செலுத்தினர்
அஜித்குமாரின் உடலானது உடற்கூராய்விற்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையினரின் பாதுகாப்புடன் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்திற்கு எடுத்துசெல்லப்பட்டது. பின்னர் அங்குள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. தமிழக வெற்றி கழகம் சார்பில் அஜித்தின் உடலுக்கு தமிழக வெற்றி கழகத்தின், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாயில் மிளகாய்பொடி கொடுத்து சித்திரவதை
காவல்துறையினர் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில், அஜித்தை விசாரணையின்போது தொடர்ந்து நகையை கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ள வேண்டும். என, அஜித் அவரது தம்பி நவீன் மற்றும் அஜித்துடன் பணிபுரியும் நான்கு பேர் என 6 பேரையும் முழங்கால் போடவைத்து, குதிங்காலில் பிளாஸ்டிக் லத்தியால் கடுமையாக தனிப்படை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். பின்னர் அஜித்குமாரிடம் மட்டும் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து தாக்கியபோது, ”தான் இறந்துவிடுவேன்” - என கதறி அழுதுள்ளார். அப்போதும் வாயில் மிளகாய்பொடியை கொடுத்துள்ளதாகவும். அப்போது தண்ணீர் வேண்டும் என, அழுது கேட்டபோது. கண்டுகொள்ளாமல் காவல்துறையினர் தொடர்ந்து, தண்ணீர் கொடுக்காமல் தாக்கியதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















