பழனியில் அதிர்ச்சி! மகள் கொலை, தாய் மாயம்: கள்ளக்காதல், போக்சோ வழக்கு பின்னணியில் பகீர் திருப்பம்!
கடந்த 3ம் தேதி கீதா, அவரது வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சத்யா நகரை சேர்ந்த தம்பதி முருகானந்தம் (52), ஹெலன் சிபா (47). இவர்களது மகள் கீதா (27) சில மாதங்களுக்கு முன்பு பழ வியாபாரியான இவர் ஏற்கனவே திருமணமான செல்வம் (62) என்பவரை திருமணம் செய்து கொண்டு பழனி லட்சுமிபுரத்தில் வசித்து வந்தார். கடந்த 3ம் தேதி கீதா, அவரது வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கீதாவின் இறுதிச்சடங்கில் அவரது தாய் ஹெலன் சிபா கலந்து கொள்ள வில்லை. மேலும் அவர் மாயமானதுடன், போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், தனிப்படை அமைத்து அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று பழனி சிவகிரிபட்டியில் இருந்த ஹெலன் சிபா மற்றும் அவருடன் இருந்த சேலம் மாவட்டம் வாழப்பாடி திருமானூரை சேர்ந்த மணிகண்டன்
ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் கீதா கொலை செய்யப்பட்டதாகவும், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "மணிகண்டன் ஜேசிபி டிரைவராக பழநியில் வேலை பார்த்து வந் துள்ளார். அப்போது அவருக்கும், ஹெலன்சி பாவுக்கும் பழக்கமாகி கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த உறவால் ஹெலன்சிபா கணவர் முருகானந்தத்தை விட்டு விட்டு மணிகண்டனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். மணிகண்டன் ஹெலன்சிபாவின் 2வது மகளான 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுமி தனது சகோதரி கீதாவிடம் தெரிவிக்க அவரும். தந்தை முருகானந்தமும் இதுகுறித்து பழனி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதன்பேரில் போலீ சார் மணிகண்டன், அவருக்கு உடந்தையாக இருந்த ஹெலன்சிபா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் நிச்சயம் தண்டனை பெற்று தருவேன் என கூறிய கீதா, இருவரையும் மிரட்டியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் சம்பவத்தன்று வீட்டிலிருந்த கீதாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மணி கண்டன் சிபாவை கைது ஹெலன் செய்து, நீதி மன்றத்தில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்தனர்























