சென்னை திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் அஜித்(28). இவர் ஏர்டெல் நிறுவனத்தில் டென்னீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் தந்தை மற்றும் தாய் உள்ளிட்ட குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த இரண்டு பெண்கள் தனியாக பேச வேண்டும் என்று கூறி அஜித்தை வெளியே அழைத்து வந்துள்ளனர். 

Continues below advertisement

தாய் கண்முன்னே மகன் கொலை

அப்போது அவர்கள் அஜித்துடன் பேசிக்கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால் கண்ணிமைக்கும் நேரத்தில் அஜித்தை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறிய படி தடுக்க முயன்ற தாயையும் வெட்டியுள்ளனர்.  பின்னர் இரண்டு பெண்கள் உட்பட 4 பேரும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் அஜித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்ஹவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த அஜித்தின் தயாரை மீட்டு போலீசார் மற்றும் பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

Continues below advertisement

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் மற்றும் அபிஷேக் தரப்புக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அபிஷேக் சிறைக்கு செல்ல அஜித் காரணம் என்பதால் அவர் மீது கொலை வெறியில் இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது மிரட்டலும் விடுத்து வந்துள்ளனர். இன்ஸ்டாவில் பகிரங்கமாக மூளையை சிதறவிடுவோம் என கானா பாடலை ஹரீஷ் தரப்பு வைத்துள்ளனர். 

நீதிமன்ற வாசலில் சபதம்

இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் சகோதரர் அபிஷேக் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை காண ஹரீஷ் சென்றுள்ளார். அப்போது நீதிமன்ற வாசலிலேயே அஜித்தை கொலை செய்வோம் என சபதம் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சபதம் எடுத்த அதே நாளிலேயே அதாவது அன்று இரவே அஜித்தை ஹரீஷ் மற்றும் போண்டா ராஜேஷ் கொலை செய்துள்ளனர். தாய் மற்றும் தந்தை கண்முன்னே அஜித் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.