மேலும் அறிய

புதுச்சேரியில் அதிர்ச்சி! OTP மோசடி : பணத்தை பறிகொடுத்த மக்கள்!

புதுச்சேரியில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை வாங்கி 98 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி.

புதுச்சேரி: புதுச்சேரியில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓ.டி.பி எண்ணை வாங்கி 98 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி, இது குறித்து மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

ஓ.டி.பி எண்ணை வாங்கி 98 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி

புதுச்சேரி தர்மாபுரியை சேர்ந்த பெண் ஒருவரை அறிமுகம் இல்லாத நபர் தொடர்பு கொண்டு, வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். வங்கியில் kyc கே.ஒய்.சி., அப்டேட் செய்ய வேண்டும் என, கூறினார். மொபைல் போனுக்கு வந்த OTP ஓ.டி.பி., எண்ணை மர்ம நபருக்கு அனுப்பினார். அவரது வங்கி கணக்கில் இருந்து, 98 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ரூ.95 ஆயிரம் மோசடி

லாஸ்பேட்டையை சேர்ந்த நபரிடம் பேசியவர், வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறினார். அதை நம்பி, அவர், 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். முதலியார்பேட்டையை சேர்ந்த பூபாலகிருஷ்ணன், பூச்செடிகள் ஆர்டர் செய்ய முன்பணம் 45 ஆயிரம் ரூபாய் அனுப்பி, ஏமாந்தார்.

ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ.6 லட்சம் மோசடி

மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்தவரை அறிமுகம் இல்லாத நபர் டெலிகிராம் குரூப்பில் இணைந்தார். அதில், வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் மூலம், சம்பாதிக்கலாம் என மர்ம நபர் கூறினார். அதை நம்பி, பல்வேறு தவணைகள் மூலம் 6.45 லட்சம் ரூபாயை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்தார்.

வில்லியனுாரை சேர்ந்த பெண் ஒருவரை வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபர் தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பிய அவர், 90 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். முதலியார்பேட்டை சேர்ந்த நபர் 6 ஆயிரம், தட்டாஞ்சாவடியை சேர்ந்த நபர் 13 ஆயிரம் அனுப்பி ஏமாந்தனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம். இதுபோன்று சமூக வலைதளங்களில் பல போலி விளம்பரங்கள் உலா வருகின்றது. செயலிகளை முற்றிலும் நம்ப வேண்டாம். சைபர் குற்றம் தொடர்பாக 1930 மற்றும் 0413 -2276144, 94892 05246 எண்களிலும், cybercell-police@py.gov.in, www.cybercrime.gov.in புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.

வங்கி OTP எண் சொல்லாதீங்க

மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
Embed widget