25 வயதான யேல் கோஹன் என்ற இஸ்ரேல் பெண் இந்த புகாரை தெரிவித்துள்ளார். அவரைப்போலவே முகம் , தோற்றம் கொண்ட செக்ஸ் பொம்மையை உருவாக்கிய நிறுவனம் அதன் அருகே இவரின் புகைப்படத்தையும் கூட பயன்படுத்தி இருப்பதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இப்படியான பொம்மை விற்பனையில் இருப்பதை அவருடைய ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தெரிவித்து உள்ளனர். அதன் பிறகே இந்த விவகாரம் அவருக்கு தெரியவந்துள்ளது.






இது குறித்து டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகைக்கு பேசிய அவர், ''செக்ஸ் பொம்மை என்னைப் போலவே இருப்பதை சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அது என்னைப் போலவே உருவாக்கப்பட்டிருந்தது. என்முகம், என் உதடு என என்னைத்தான் அது பிரதிபலித்தது. இது தொடர்பாக என்னிடம் அனுமதி கேக்கவோ, என்னிடம் இது குறித்து தெரிவிக்கவே இல்லை. அது மட்டுமில்லை. அவர்கள் என்னுடைய பெயரைக் கூட பயன்படுத்தியுள்ளனர். இது சாதாரண விஷயம் அல்ல என்றார். இது தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனம் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாப்ட்வேர் இஞ்சினியரான  யேல் கோஹன் இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் பணியாற்றினார். பின்னர் வேலையை துறந்த அவர் மாடலிங் மற்றும் இதழ் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார். 






செக்ஸ் பொம்மை என்பது வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் கஜகஸ்தானை சேர்ந்த யூரி டோலோச்கோ என்ற பாடிபில்டர் செக்ஸ் பொம்மையை திருமணம் செய்துகொண்டு உலகம் முழுவதும் பிரபலமானார். இந்தநிலையில், தனது முதல் செக்ஸ் பொம்மை உடைந்து விட்டதாகவும், தற்போது அதேபோல் இரண்டாவது செக்ஸ் பொம்மையை திருமணம் செய்து கொண்டதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் தெரிவித்தார்.