விழுப்புரம் அருகே அரசு பள்ளி வாசலில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு:- தடுக்க முயன்ற 3 மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு. விழுப்புரம் அருகே உள்ள கோலியனூரில் இயங்கி வரும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் நடராஜன் என்பவருக்கும், அவரது மூத்த சகோதரரான ஸ்டாலின் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோலியனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற ஸ்டாலின், ஆசிரியரான தனது தம்பி நடராஜனை அழைத்து சொத்து தொடர்பாக பேசியுள்ளார்.


அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது தம்பியான ஆசிரியர் நடராஜனை, ஸ்டாலின் சரமாரியாக வெட்டியுள்ளார். பள்ளி வளாகத்தில் ஆசிரியர் நடராஜனை ஒருவர் அரிவாளால் வெட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மாணவர்கள் சிலர் ஓடி சென்று தடுத்துள்ளனர். இதில் 11ஆம் வகுப்பு மாணவர்களான மனோஜ், ஆகாஷ், முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு கையில் காயம் ஏற்பட்டது.


இதனையடுத்து பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்று சேர்ந்து ஸ்டாலினை பிடித்து வைத்து கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த ஆசிரியர் நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வளவனூர் போலீசார், ஆசிரியர் நடராஜனை அரிவாளால் வெட்டிய அவரது அண்ணன் ஸ்டாலினை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 




 


என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.