மேலும் அறிய

தாம்பரம் விடுதியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கால்களை உடைத்து பாலியல் தொல்லை!

சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூரை சேர்ந்த 13 வயது சிறுமி சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் தங்கி 8ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியின் கால்களை உடைத்து காவலாளி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரமான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை இழந்த சிறுமி குடும்ப வறுமையின் காரணமாக விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த சூழலில் இப்படியொரு கொடுமையான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 

முகத்தை மூடி கொடூரம்

ஞாயிற்று கிழமையான நேற்று விடுமுறை தினம் என்பதால் மாணவிகள் பலரும் ஊருக்குச் சென்றுள்ளனர். இந்த சிறுமி மட்டும் விடுதியில் தங்கியுள்ளார். விடுதியில் தனியாக படுத்திருந்த சிறுமியின் முகத்தை மூடி காவலாளி பாலியல் வன்ககொடுமை செய்துள்ளனர். தப்பித்து ஓட முயன்ற போது சிறுமியை கீழே தள்ளி  கால்களை உடைத்து பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறுமியின் 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு உடல்களில் காயங்களோடு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காவலாளி கைது

இச்சம்பவத்தை தொடர்ந்து சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்தது. பின்னர், சிறுமியின் இரண்டு கால்களும் உடைந்ததால் மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேரடியாக காவலாளிகளை அழைத்து சென்று சிறுமியிடம் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இதில், காவலாளி மேத்யூ என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்திற்கு பின்பு மாணவிகளை காண பெற்றோர் குவிந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடர் கொலை கொள்ளை  சம்பவம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவது மக்களை அச்சுறுத்தி வருகிறது. பகல் நேரங்களில் கூட பொதுமக்கள் தனியாக செல்ல அஞ்சும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து கடந்த நான்கு ஆண்டுகளில்  6597 படுகொலைகள் நடந்துள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 4.52 படுகொலைகள் நடந்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில் புள்ளி விவரங்களுடன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

திட்டமிட்டு படுகொலை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு படுகொலை நடக்காத நாளே இல்லை. தமிழக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. சிறுமி முதல் வயதான பெண்கள் வர பாலியல் தொல்லைக்கு ஆளாகுகிறார்கள். பெண்களின் நிலையும் மோசமாக இருப்பதாகவும் அண்புமனி குற்றம்சுமத்தினார். தமிழ்நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை தொடர்பான சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்றும் கூறி சிக்கலை திசை திருப்புவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இதுவரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என்றும் அன்புமணி புகார் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Embed widget