சேலத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் வெட்டி கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவரைகும்பல் ஒன்று வழிமறித்து ஓட ஓட வெட்டி சாய்த்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

கொலை நடந்தது எப்படி?

சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், இன்று காலை 11 மணியளவில் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புது ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ரயில்வே மேம்பாலத்தில் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து தப்பிக்க பாலத்திற்கு கீழே ஓடிச் சென்ற அவரை, ஓட ஓட விரட்டி பாலத்திற்கு கீழே பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்த்து உள்ளனர். இதில் டேவிட் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டேவிட் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரது நண்பர்கள் உறவினர்கள் மேம்பாலத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

Continues below advertisement

திமுக பிரமுகர்

கொலை செய்யப்பட்ட டேவிட் ரியல் எஸ்டேட்டில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறைக்குச் சென்று ஜாமீனில் 20 நாட்களுக்கு முன்பாக வெளியே வந்துள்ளார் என்பது கூறப்படுகிறது. ஜாமீனில் வெளியே வந்த அவரை நோட்டமிட்ட மர்ம கும்ப கும்பல் இன்று காலை இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வழிமறித்து சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். 

மக்கள் நடமாட்டம் மிகுந்த மேம்பாலத்தில் பட்ட பகலில் ரிலீஸ் டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் கொலையாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் காலணிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. டேவிட் திமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.