சேலம்: எடப்பாடி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Continues below advertisement

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு சங்கோதி வட்டம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மணிகண்டன்( 33). விசைத்தறி கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி நந்தினி ( 28)  மகள்கள் சஞ்சனா, தாரணிகா என இரு பெண் குழந்தைகளும் மற்றும் வேல்முருகன் (4) என்ற மகனும் உள்ளனர்.

நடத்தையில் சந்தேகம்

இந்நிலையில், நந்தினியின் நடத்தையில் சந்தேகப்பட்ட  மணிகண்டன் அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.  நேற்று இரவு மது போதையில் மணிகண்டன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கோபத்தின் உச்சிக்கு சென்ற மணிகண்டன் துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Continues below advertisement

இதனையடுத்து, மணிகண்டன் எடப்பாடி காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை கொலை செய்த தகவலை தெரிவித்து சரணடைந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இந்த கொலை சம்பவம் குறித்து மணிகண்டனிடம்  தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தால் மனைவி கொன்று கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.