திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அகிலம்பேட்டையை சேர்ந்தவர் பூங்குழலி விஜயகுமார். இவர் கருவுற்றநாளிலிருந்து மயிலாடுதுறை மகாதானத்தெருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கிடையே ஜுலை மாதம் 19 ம் தேதி பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனை நடத்தும் மருத்துவர் லண்டன் சென்று திரும்பி ஒரு சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை திரும்பியுள்ளார். 




இதனையடுத்து நேற்று முன்தினம் வழக்கம்போல் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற பூங்குழலி விஜயகுமார் வந்துள்ளனர்.  இந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் வேறு ஒரு பெண் மருத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும், இல்லை என்றால் குழந்தைக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். அதனையடுத்து நேற்று காலை அறுவை சிகிச்சை செய்து ஆண்குழந்தையை எடுத்துள்ளனர். குறைமாதத்தில் குழந்தை பிறந்ததால் குழந்தையை இன்குபேட்டரில் வைத்துள்ளனர். 





உரிய மருத்துவர் கண்காணிப்பு இல்லாமல் செவிலியரே குழந்தையை தூக்கிச்சென்று தாயிடம் நான்கு முறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வைத்துள்ளார்.  இரவு 7 மணிக்கு திடீரென்று குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர் கூறவே அதிர்ந்துபோன பெற்றோர் செய்வதறியாது நன்றாக இருந்த குழந்தை எப்படி இறந்தது, மருத்துவர் ஒருவர் அருகில் இருந்து பார்த்திருந்தால் இதுபோல் நடந்திருக்காது, மருத்துவமனையின் அலட்சியத்தால் தன் குழந்தையை இறக்க நேரிட்டது என்று கூறி மருத்துவமனை வளாகத்தில் இருந்த கண்ணாடியை அடித்து உடைத்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.  




தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறைை காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எப்படி குழந்தை இறந்தது என்றே தெரியவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறுவதாகவும், குழந்தை எப்படி  இறந்தது, அடுத்த மாதம் பிரசவ தேதி குறித்தும்  ஏன் திடீரென்று அறுவை சிகிச்சை செய்தனர்? பிரசவம் நடைபெற்ற பிறகு ஏன் மருத்துவரைக் கொண்டு கண்காணிக்கவில்லை என பல்வேறு கேள்விகளை உறவினர்கள் எழுப்பினர். அதனையடுத்து டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் குழந்தையின் உறவினர்கள் கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிலர் பணத்திற்காக சுகப்பிரசவத்தைக்கூட அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்து. அறுவை சிகிச்சை செய்து தாய், சேய் ஆகிய இருவரது உயிருடன் விளையாடுவதகாவும், இது போன்ற மருத்துவமனைகளை தமிழ்நாடு அரசு உரிய முறையில் கண்காணித்து தவறான சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனை உரிமத்தையும், மருத்துவர்களின் மருத்துவ பயின்ற படிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் இதுபோன்ற தவறுகள் தொடராது என கருத்து தெரிவித்துள்ளனர்.