இந்து சமய அறநிலையத்துயின் மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 6876 சதுர அடி பரப்பளவு உள்ள நிலம் ரூபின் சார்லஸ் என்பவருக்கு புஞ்சை குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்றி கட்டடம் கட்டி மோட்டார் தொழில் கூடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து ரூபின் சார்லஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78- ன் கீழ் மனு எண் 97/ 2016 வெளியேற்று வழக்கினை கோயில் நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது.
வழக்கின் முடிவில் 2019 பிப்ரவரி 25 ஆம் தேதி இணை ஆணையர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி ரூபின் சார்லஸ் என்பவரை கோயில் நிலத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரூபின் சார்லஸ் கோயில் இடத்திலிருந்து வெளியிடுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இடத்தை விட்டு வெளியேறாததை அடுத்து மயிலாடுதுறை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவின் படி உதவி ஆணையர் முத்துராமன் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முற்பட்டனர்.
அப்போது ரூபின் சார்லஸ் மனைவி பிரேமலதா தடுத்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து ஆதரவு வக்கீல்கள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்டு எடுத்து காம்பவுண்ட் கேட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தில் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதன் எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் அதனுடன் தொடர்புடைய துணை அமைப்புகளையும் மத்திய அரசு நேற்று தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் துறையினர் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கண்ணாரத்தெரு முக்கூட்டில், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாகன நம்பர் பிளேட் இல்லாமலும், அதிவேகமாகவும் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதேபோல் மயிலாடுதுறையில் கால்டெக்ஸ், சாரங்கபாணி மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வாகன சோதனையானது நடைபெற்றது. இதுபோன்று சீர்காழி நகர்பகுதி, கொள்ளிடம், பூம்புகார், பொறையார் உள்ளிட்ட பகுதிகளிலும் அந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
HBD Kushboo: ‛றெக்கை கட்டி பறந்தவ இவ தான்...’ எந்நாளும் கொண்டாடப்படும் குஷ்புவின் பிறந்தநாள் இன்று!