Crime: பஞ்சாபில் ஷாக்! கபடி வீரர் சுட்டுக் கொலை...உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டு வாசலில் எரிந்த கொடூரம்!
பஞ்சாபில் கபடி வீரர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime: பஞ்சாபில் கபடி வீரர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் தில்வான் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்தீப் சிங் (22). கபடி வீரரான இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டிற்குள் வந்த மர்ம நபர்கள் ஹர்தீப் சிங்கை சரமாரியாக தாக்கி உள்ளனர். அவரை துப்பாக்கியால் சுட்டதோடு, அவர்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் அவரை வெட்டினர். பின்னர், அவரது உடல் பாகங்களை வீட்டிற்கு வெளியே வீசி விட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹர்தீப் சிங் உடலை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை. இருப்பினும், கடந்த சில நாள்களுக்கு முன்னர் நடந்துள்ளதாகவும், கொல்லப்பட்ட கபடி வீரரின் உடல் பாகங்களை அவரது வீட்டின் முன்னே தூக்கி வீசி எரிந்த பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், இந்த கொடூர கொலைக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.
இந்த சம்பவத்தை முன்வைத்து பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பஞ்சாப் முதல்வர் பகவந்த மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கடுமையாக சாடியுள்ளது. பஞ்சாபில் காட்டாட்சி நடப்பதாகவும், முதல்வர் பகவந்த் மான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக சுக்பீர் சிங் பாதல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இளம் கபடி வீரர் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்காரர்களின் அச்சமின்னை இதை பார்த்தாலே புரியும். அம்மாநிலத்தில் காட்டு ராஜா ஆட்சி நடைபெறுகிறது. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வாக உள்ளது. எனேவே முதல்வர் பகவாத் மான் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க
Crime: வருங்கால கணவருடன் வெளியே சென்ற பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. 5 பேர் கும்பல் வெறிச்செயல்
Crime: பெண் போலீஸை கொடூரமாக தாக்கிய நபர்; சுற்றி வளைத்து போட்டு தள்ளிய போலீஸ் - உ.பி.யில் அதிரடி