மேலும் அறிய

Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்

Crime News: மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு அவர் காணாமல் போனதாக நாடகமாடி ஏமாற்றிய கணவனை புனேவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

Crime News: மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு, அவருக்கு திருமணத்தை மீறிய தகாத உறவு இருப்பதாக கணவர் நாடகமாடியுள்ளார்.

சினிமா பாணியில் கொலை

சினிமா கதைகளையே மிஞ்சும் வகையில் புனேவைச் சேர்ந்த நபர், தனது மனைவியை கொன்று உடலை எரித்து அப்புறப்படுத்தியுள்ளார். ஆனால், போலீசில் சிக்கக் கூடாது என்பதற்காக காவல்நிலையத்தில் அவர் காணாமல் போனதாக புகார் அளித்ததோடு, எனது மனைவியை கண்டுபிடித்துவிட்டீர்களா? என அடிக்கடி நேரில் சென்றும் விசாரித்துள்ளார். மனைவியை கொன்ற பிறகு அவரது செல்போனில் இருந்து வேறொரு நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பி, அவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் சித்தரிக்க முயன்றுள்ளார். ஆனால், காவல்துறையின் விசாரணையில் மொத்த நாடகமும் அம்பலமாக, சினிமா பார்த்தே தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நடந்தது என்ன?

பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த அஞ்சலி என்பவரை, கடந்த 2017ம் ஆண்டு சமீர் ஜாதவ் திருமணம் செய்துள்ளார். ஆட்டோமொபைல் டிப்ளமோ படித்து முடித்திருந்த நபர், சொந்தமாக கராஜ் ஒன்றை நடத்தி வந்துள்ளார். புனேவின் சிவானா நகரில் வசித்து வந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் முறையே 3 மற்றும் 5ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி தான் புதியதாக வாடகைக்கு எடுத்துள்ள கிடங்கை காட்டுகிறேன் என கூறி தனது மனைவியை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதுமே அங்கு அஞ்சலியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து அங்கு ஏற்கனவே தான் தயார்படுத்தி வைத்திருந்த,இரும்பு உலையில் அஞ்சலியின் உடலை எரித்து சாம்பலை அருகில் இருந்த ஆற்றில் கரைத்துள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில் இந்த தம்பதியின் குழந்தைகள், தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு சென்றுள்ளனர்.

அம்பலமான ஓவர் நடிப்பு

தொடர்ந்து, சமீர் காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவி காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். மீண்டும் மீண்டும் அங்கு வந்து காணாமல் போன எனது மனைவியை காவல்துறை எப்போது கண்டுபிடிக்கும்? கொலையாளியை கண்டுபிடிப்பதில் அவர்கள் என்ன முன்னேற்றம் அடைந்துள்ளனர்? என அடிக்கடி விசாரித்துள்ளார். அவரது செயல்பாட்டால் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்த சூழலில் தான் சமீர் ஜாதவ் தொடர்பான விசாரணை, சிசிடிவி காட்சிகளின் பகுப்பாய்வு மற்றும் முழுமையான தொழில்நுட்ப விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை வெளிப்பட்டுள்ளது. அவரது வாக்குமூலங்களுக்கும் தொழில்நுட்ப ஆதாரங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் காவல்துறையின் கவனத்தை சமீர் மீது முழுமையாக திருப்பியுள்ளன. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். த்ரிஷ்யம் திரைப்படத்தை நான்கு முறைக்கு மேல் பார்த்தே, இந்த கொலை திட்டத்தை தீட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

தகாத உறவால் கொலை

மனைவியின் மீது இருந்த சந்தேகத்தின் காரணமாகவே முதலில் கொலை செய்ததாக காவல்துறையினர் நம்பினர். ஆனால், சமீருக்கே வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனாலும் தனது திட்டப்படி மனைவியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்த, அஞ்சலியின் செல்போனில் இருந்து தனது நண்பர்களில் ஒருவருக்கு “ஐ லவ் யு” என குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதற்கு தானே பதிலையும் அனுப்பியுள்ளார். காவல்துறை விசாரணைக்காக இதனை ஆதாரமாகவும் சமீர் சமர்பித்துள்ளார். உண்மைகள் அனைத்தும் வெளியான நிலையில், சமீரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
ஐ.நாவின் 'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்' விருது வென்ற கூடுதல் தலைமை செயலாளர் - சுப்ரியா சாகு சாதித்தது என்ன?
ஐ.நாவின் 'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்' விருது வென்ற கூடுதல் தலைமை செயலாளர் - சுப்ரியா சாகு சாதித்தது என்ன?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
Embed widget