புதுச்சேரி : சமூக வலைதளங்களில் உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா என செய்தி அனுப்பி பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு 50 க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றிய கடலூரைச் சேர்ந்த பெண் புதுச்சேரி இணைய வழி போலீசார் கைது. 


உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா ?


தஞ்சாவூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் புதுச்சேரி தனியா நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா என்று வாட்ஸ் அப்பில் வந்த தகவலை அடுத்து அதில் வந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் ஒரு பெண் பேசி இருக்கிறார்.


இளம் பெண்கள் புகைப்படம் : இதில் உங்களுக்கு யார் வேண்டும்!


விக்னேஷ் பெண்கள் சம்பந்தமாக எவ்வளவு பணம் எப்போது அனுப்புவீர்கள் போன்றவற்றை பேசியவுடன் பெண்களுடைய புகைப்படத்தை அனுப்ப சொல்லி இருக்கிறார் மேற்படி பெண்ணும் ஐந்துக்கும் மேற்பட்ட இளம் பெண்களுடைய புகைப்படத்தை அனுப்பி இதில் உங்களுக்கு யார் வேண்டும் என்று கேட்ட பொழுது ஒரு பெண்ணின் புகைப்படத்தை தேர்வு செய்து  அனுப்பி இந்த பெண்தான் வேண்டும் என்று அந்த வாலிபர் கேட்டவுடன் இந்த பெண் வேண்டுமென்றால் ஒரு இரவிற்கு 10 ஆயிரம் ரூபாய் என்று கூறியிருக்கிறார்.


இருந்தாலும் அட்வான்ஸ் ஆக 5000 ரூபாய் நீங்கள் போட்டால் தான் உங்களுக்கு அந்த பெண்ணை அனுப்பி வைக்கிறோம் என்று கூறிவிட்டு 5000 ரூபாய் பணத்தை GPAY மூலமாக அந்த நபர் அந்த பெண்ணுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். முத்தியால்பேட்டையில் ஒரு இடத்தை சொல்லி அங்கே காத்திருக்கும் படி சொல்லி ஐந்து மணி நேரம் அதற்கு மேலாகியும் யாரும் வராததால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.


மோசடி செய்த 35 வயது பெண் கைது


இது சம்பந்தமாக  போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த வங்கி கணக்கு மற்றும் அவர் தொடர்பு கொண்ட எண் ஆகியவற்றை வைத்து மேற்கண்ட நபர் யார் என்பதை கண்டுபிடித்த போது கடலூரைச் சார்ந்த 35 வயது காயத்ரி என்பது தெரிய வரவே மேற்படி நபரை இணைவழி போலீசார் கைது செய்து தலைமை குற்றவியல் நீதிபதி திரு பாலமுருகன் முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் இளம் பெண்களுடைய படங்கல் சம்பந்தமாக காயத்ரியிடம் விசாரணை செய்தபோது சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் இருந்து அனைத்து புகைப்படத்தையும் எடுத்ததாக அவர் தெரிவித்தார் எப்போதெல்லாம் புகைப்படங்கள் வேண்டுமோ அப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் இருந்து பெண்களுடைய புகைப்படத்தை எடுத்து அனுப்புவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அனுப்பிய புகைப்படங்கள் அனைத்துமே புதுச்சேரியை சேர்ந்த பெண்களுடையது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


ஆறு மாதங்களில் 4 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம்


சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதால் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை இளம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட காயத்ரியின் வங்கி கணக்கில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் 4 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வந்திருப்பது இணைவழி போலீசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஐந்தாயிரம் இரண்டாயிரம் என அவருடைய வங்கிக் கணக்கிற்கு ஜிபேவில் பணம் அனுப்பி இருப்பது விசாரணையில் தெரிய வருகிறது. வங்கி கணக்கில் பெண் வேண்டுமென ஏமாந்து பணம் போட்டவர்களின் விவரங்களை கண்டுபிடித்து  இணைவழி போலீசார் நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்து வருகின்றோம் மேலும் இதுபோன்று யாராவது ஏமாந்து இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 


 


இணைய வழியில் வருகின்ற விளம்பரங்கள் குறைந்த விலையில் பொருட்களை தருகிறோம், வேலை வாய்ப்புகள், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம், ஆட்டோமேட்டிக் ஷேர் மார்க்கெட், உங்களுடைய ஆதார் கார்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது, மும்பை சைபர் கிரைமில் இருந்து பேசுகிறோம் உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம், போன்ற எதையுமே நம்பி பணத்தை செலுத்தி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்  பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய புகைப்படங்களை பதிவிடும் பொழுது எச்சரிக்கையோடு இருக்குமாறு புதுச்சேரி இணை வழி போலீசார் பொதுமக்களை எச்சரிக்கை செய்கின்றனர்.