கடலூர் அருகே வயல்வெளியில் பிரபல ரவுடி கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

கடலூர் தூக்கணாம்பாக்கம் அருகே வயல்வெளியில் பகுதிகளில் உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சிதைந்த நிலையில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Continues below advertisement

காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி புகழ் என்கின்ற புகழேந்தி என்பது தெரிய வந்தது.  இவர் மீது இரண்டு கொலை வழக்கு, இரண்டு கொலை முயற்சி மற்றும் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரவுடி புகழேந்தியை அழைத்து வந்து கொடூர கொலை செய்தார்களா? கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரி பிரபல ரவுடி சடலமாகக் கிடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு நடத்திய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், குற்றவாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் அருகே புதுச்சேரி மாநில ரவுடி வெட்டி படுகொலை செய்த சம்பவம் இரு மாநில எல்லைகளில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.