Cyber Crime: பெண்ணிற்கு செல்போனில் ஆபாச மிரட்டல்; தட்டிதூக்கிய போலீஸ்

கடந்த ஆண்டில் 45 புகார்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகள் பதியப்பட்டு அனைத்து வழக்குகளும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

புதுச்சேரி: புதுச்சேரி திருக்கனூரை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக அறிமுகமில்லாத எண்ணிலிருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்தி வந்ததையடுத்து அப்பெண் இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Continues below advertisement

எனவே இந்தபுகார் சம்பந்தமாக இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைத்தானியா மற்றும் இணைய வழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோரின் உத்தரவின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர் கீர்த்தி அவர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். மேலும் அந்த பெண்ணிற்கு ஆபாசமாக வீடியோ அனுப்பிய வாட்ஸ் அப் எண்ணின் இயக்கங்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரிய வரவே இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர் தியாகராஜன்  தலைமையில் தனிப்படை குழு அமைத்து பல்வேறு இணையவழி யுக்திகளை கையாண்டதில் குற்றவாளி பற்றிய விவரம் தெரியவந்தது.

அந்த வாலிபர் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த வேலு என்கிற இம்மானுவேல், ராஜேஷ் என தெரிய வந்தது. தொடர்ந்து அந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் பெண்ணிற்கு ஆபாசமாக புகைப்படம் அனுப்பியது வேலு என்கிற இம்மானுவேல், ராஜேஷ் தான் எனவும் மேலும் ஒரு சில பெண்களுக்கும் இதுபோன்று ஆபாச மெசேஜ்களும் வீடியோக்களும் அனுப்பியது விசாரணையில் தெரிவ வந்தது.

எனவே இவ்வழக்கு சம்பந்தமாக மேற்படி நபரை கைது செய்து புதுவை தலைமையியல் குற்ற நீதிபதி சிவகுமார் முன்னிலையில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.  

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் பெண்களும் அறிமுகமில்லாத எண்ணிலிருந்து பெண்களுக்கு அச்சுறுத்தப்படுகின்ற மாதிரி ஏதேனும் ஆபாச புகைப்படங்கள் வந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு புகார் செய்யுமாறும் அல்லது இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அப்படி புகார் கொடுக்கும் பட்சத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டில் 45 புகார்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகள் பதியப்பட்டு அனைத்து வழக்குகளும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இளைஞர்கள் ஆண்கள் குறிப்பாக இணைய வழியில் நடக்கின்ற குற்றங்களை போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று யாரேனும் எளிதில் என்ன வேண்டாம் எனவும் எச்சரிக்கை செய்கிறார்.

இதுபோன்ற தவறுகள் செய்பவர்களை இணைய வழி காவல் நிலையத்தில் அதி நவீன தொழில்நுட்பம் மூலம் மிக எளிமையாக குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சைபர் குற்றவாளிகளை எச்சரிக்கை செய்கின்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola